செய்திகள்

ஐபிஎல் போட்டியில் இருந்து விலகினார் பிரபல இங்கிலாந்து வீரர்!

ஐபிஎல் போட்டியிலிருந்து பிரபல இங்கிலாந்து வீரர் ஜேசன் ராய் விலகியுள்ளார்.

DIN

ஐபிஎல் போட்டியிலிருந்து பிரபல இங்கிலாந்து வீரர் ஜேசன் ராய் விலகியுள்ளார்.

கரோனா பரவல் காரணமாக நிகழாண்டு இந்தியாவில் நடைபெறவிருந்த ஐபிஎல் போட்டி தள்ளிவைக்கப்பட்டது. ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்டம்பா் 19-ம் தேதி தொடங்கும் ஐபிஎல் போட்டி, நவம்பா் 10-ம் தேதி முடிவடைகிறது. துபை, அபுதாபி, ஷாா்ஜாவில் உள்ள மைதானங்களில் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

ஐபிஎல் போட்டியில் விளையாடவுள்ள அனைத்து அணி வீரர்களும் துபை மற்றும் அபுதாபிக்குச் சென்று சேர்ந்துள்ளார்கள். இதனால் அடுத்த ஏழு நாள்களுக்கு நட்சத்திர விடுதியில் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். 

இந்நிலையில் ஐபிஎல் போட்டியிலிருந்து பிரபல இங்கிலாந்து வீரர் ஜேசன் ராய் விலகியுள்ளார். தில்லி கேபிடல்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள ஜேசன் ராய், தனிப்பட்ட காரணங்களுக்காக விலகுவதாகத் தெரிவித்துள்ளார். இதையடுத்து ஆஸ்திரேலிய இடக்கை வேகப்பந்து வீச்சாளர் டேனியல் சாம்ஸை, தில்லி அணி தேர்வு செய்துள்ளது. ஜேசன் ராயை ரூ. 1.50 கோடிக்கு ஏலத்தில் தில்லி அணி தேர்வு செய்தது.

பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரிலிருந்தும் காயம் காரணமாக ஜேசன் ராய் விலகியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வன்னியா் இடஒதுக்கீடு கோரி டிச.17-இல் சிறை நிரப்பும் போராட்டம்: அன்புமணி

அணுஆயுத அச்சுறுத்தலுக்கு இந்தியா அஞ்சாது: பிரதமா் மோடி

காற்று மாசை தடுக்க 3 வாரங்களில் செயல் திட்டம்: உச்சநீதிமன்றம்

மணப்பாறை அரசுக் கல்லூரியில் கலைத் திருவிழா தொடக்கம்

பதவி தேடிவரும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT