முகப்பு
செய்திகள்

ஐசிசி டி20 தரவரிசை: 3-வது இடத்துக்கு ராகுல் முன்னேற்றம்

​சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) டி20 பேட்டிங் தரவரிசையில் இந்திய வீரர் கேஎல் ராகுல் ஒரு இடம் முன்னேறி 3-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:04 PM
கோப்புப்படம்
பகிர்:


சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) டி20 பேட்டிங் தரவரிசையில் இந்திய வீரர் கேஎல் ராகுல் ஒரு இடம் முன்னேறி 3-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலிய டி20 தொடரின் முதல் ஆட்டத்தில் கேஎல் ராகுல் அரைசதம் அடித்தார். இந்தியக் கேப்டன் விராட் கோலி இந்தத் தொடரில் 134 ரன்கள் எடுத்து அசத்தினார். இதன்மூலம், டி20 தரவரிசையில் இருவரும் தலா ஒரு இடம் முன்னேறியுள்ளனர். 3-வது இடத்திலிருந்த ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபிஞ்சை பின்னுக்குத் தள்ளி ராகுல் அந்த இடத்தைப் பிடித்துள்ளார். விராட் கோலி 8-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

முதல் இரண்டு இடங்களில் முறையே டேவிட் மலான் மற்றும் பாபர் அசாம் ஆகியோர் நீடிக்கின்றனர்.

பந்துவீச்சு தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் சுழற்பந்துவீச்சாளர் ஆடம் ஸாம்பா 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →