முகப்பு
செய்திகள்

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணியில் மார்கஸ் ஹாரிஸ் தேர்வு

ஆஸ்திரேலிய அணிக்காக இதுவரை 9 டெஸ்டுகளில் விளையாடியுள்ள மார்கஸ் ஹாரிஸ்...

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:06 PM
ஆஸ்திரேலிய அணி (கோப்புப் படம்)
பகிர்:

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் வில் புகோவ்ஸ்கி விலகியுள்ளதால் அவருக்குப் பதிலாக மார்கஸ் ஹாரிஸ் ஆஸ்திரேலிய அணிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டெஸ்ட், ஒருநாள், டி20 தொடா்களில் விளையாடுகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 1-2 எனத் தோற்றது இந்திய அணி. எனினும் டி20 தொடரை 2-1 என வென்றது.

டிசம்பர் 17 முதல் டெஸ்ட் தொடர் தொடங்குகிறது.

காயம் காரணமாக டேவிட் வார்னர் முதல் டெஸ்டிலிருந்து விலகியுள்ளார். இந்நிலையில் மற்றொரு தொடக்க வீரருமான வில் புகோவ்ஸ்கியும் விலகியுள்ளார். 

இந்தியன்ஸ் அணிக்கு எதிரான 2-வது பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய ஏ அணி சார்பாக விளையாடிய புகோவ்ஸ்கியின் ஹெல்மட்டில் பந்து பட்டது. இதனால் அவர் அந்தப் பாதிப்பிலிருந்து மீண்டு வருவதற்காக ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து ஆஸ்திரேலிய அணிக்காக இதுவரை 9 டெஸ்டுகளில் விளையாடியுள்ள மார்கஸ் ஹாரிஸ், முதல் டெஸ்டுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.