முகப்பு
செய்திகள்

ஆஸ்திரேலியா செல்லும் ரோஹித் சர்மா: உறுதி செய்த பிசிசிஐ

உடற்தகுதித் தேர்வில் தேர்ச்சியடைந்த ரோஹித் சர்மா, டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியா செல்வதை பிசிசிஐ உறுதி செய்துள்ளது.

செய்திகள்

ஆஸ்திரேலியா செல்லும் ரோஹித் சர்மா: உறுதி செய்த பிசிசிஐ

உடற்தகுதித் தேர்வில் தேர்ச்சியடைந்த ரோஹித் சர்மா, டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியா செல்வதை பிசிசிஐ உறுதி செய்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:06 PM
பகிர்:

உடற்தகுதித் தேர்வில் தேர்ச்சியடைந்த ரோஹித் சர்மா, டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியா செல்வதை பிசிசிஐ உறுதி செய்துள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின்போது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக சில போட்டிகளில் விளையாடாமல் இருந்துவிட்டு மீண்டும் களமிறங்கினாா் ரோஹித் சா்மா. முழுமையாக குணமடையாத நிலையிலேயே அவா் ஐபிஎல் போட்டிகளில் விளையாடியதாக கூறப்படுகிறது. அவா் தலைமை வகித்த மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் சாம்பியன் பட்டத்தையும் வென்றது.

எனினும், காலில் ஏற்பட்ட காயத்தில் இருந்து முழுமையாக மீளாத காரணத்தால் ஆஸ்திரேலியாவுக்கு சென்ற இந்திய அணியில் ரோஹித் சா்மா சோ்க்கப்படவில்லை. இப்போது காயத்தில் இருந்து மீண்டுள்ள ரோஹித் சா்மாவின் உடற்தகுதி எவ்வாறு உள்ளது என்பது தொடா்பாக பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாதெமியில் நேற்று பரிசோதனை நடைபெற்றது. இதில் அவர் தேர்ச்சி அடைந்துள்ளார். இதையடுத்து தனி விமானத்தில் ஆஸ்திரேலியாவுக்குச் செல்லவுள்ளார். 

பெங்களூரிலிருந்து மும்பைக்குச் செல்லும் ரோஹித் சர்மா அங்கிருந்து தனி விமானத்தில் ஆஸ்திரேலியாவின் சிட்னிக்குச் செல்கிறார். அங்கு 14 நாள்களுக்குத் தனிமைப்படுத்தப்படுவார். இதனால் 2-வது டெஸ்ட் வரை அவரால் டெஸ்ட் தொடரில் பங்கேற்க முடியாது. கிறிஸ்துமஸ் முடிந்த பிறகு இந்திய அணியினருடன் இணைந்து பயிற்சி மேற்கொள்ளவுள்ளார். ஜனவரி 7 மற்றும் ஜனவரி 15 ஆகிய தேதிகளில் தொடங்கும் 3-வது மற்றும் 4-வது டெஸ்டுகளில் அவர் பங்கேற்கவுள்ளார்.

உடற்தகுதித் தேர்வில் ரோஹித் சர்மா தேர்ச்சியடைந்ததை பிசிசிஐ உறுதி செய்துள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

ரோஹித் சர்மாவின் பேட்டிங், ஃபீல்டிங், ஓடி ரன் எடுப்பது ஆகியவற்றைப் பரிசோதனை செய்த என்.சி.ஏ. மருத்துவக் குழு, அவருடைய உடற்தகுதியில் திருப்தி அடைந்துள்ளது. எனினும் நீண்ட நேரம் தொடர்ந்து விளையாடுவதில் அவர் தன்னை இன்னும் மேம்படுத்திக்கொள்ள வேண்டும். ஆஸ்திரேலியாவில் இரு வாரத் தனிமைப்படுத்துதலில் என்னென்ன செய்யவேண்டும் என்பது குறித்து அவருக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தனிமைப்படுத்துதல் காலத்துக்குப் பிறகு இந்திய அணியின் மருத்துவக் குழு ரோஹித் சர்மாவை மீண்டும் பரிசோதனை செய்யும். அதன்பிறகே டெஸ்ட் தொடரில் அவர் பங்கேற்பது குறித்து முடிவெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →