ஆஸ்திரேலிய அணி 
செய்திகள்

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: ஆஸி. வீரர் அபாட் விலகல்!

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இருந்து ஆஸி. வீரர் அபாட் விலகியுள்ளார்.

DIN


இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இருந்து ஆஸி. வீரர் அபாட் விலகியுள்ளார். இதையடுத்து ஹென்றிகஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டெஸ்ட், ஒருநாள், டி20 தொடா்களில் விளையாடுகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 1-2 எனத் தோற்றது இந்திய அணி. எனினும் டி20 தொடரை 2-1 என வென்றது.

டிசம்பர் 17 முதல் டெஸ்ட் தொடர் தொடங்குகிறது.

காயம் காரணமாக டேவிட் வார்னர் முதல் டெஸ்டிலிருந்து விலகினார். பிறகு மற்றொரு தொடக்க வீரருமான வில் புகோவ்ஸ்கியும் விலகினார்.  

இந்தியன்ஸ் அணிக்கு எதிரான 2-வது பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் அபாட்டுக்குக் காயம் ஏற்பட்டது. இதையடுத்து இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டிலிருந்து அவர் விலகியுள்ளார். தற்போது, ஆஸ்திரேலிய அணியில் ஹென்றிகஸ் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டி20 உலகக் கோப்பையில் அதிக ரன்கள் குவித்து இந்தியா சாதனை; ஜிம்பாப்வேக்கு இமாலய இலக்கு!

ரூ. 2,000 கோடி முதலீடு செய்த ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ்!

மேற்கு வங்கம்: விடுதி அறையில் இருந்து மருத்துவ மாணவரின் சிதைந்த உடல் மீட்பு

வெறுப்புணர்வுக் கருத்து: அஸ்ஸாம் முதல்வருக்கு குவாஹாட்டி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

காங்கிரஸுடன் கூட்டணி? நல்லதே நடக்கும்: செங்கோட்டையன்

SCROLL FOR NEXT