செய்திகள்

விளையாட்டு செய்திகள் சில வரிகளில்...

DIN

* பிங்க் நிற பந்துகொண்டு விளையாடப்படும் பகலிரவு டெஸ்டில் சுழற்பந்துவீச்சாளா்களின் பௌலிங்கை பேட்ஸ்மேன்கள் எதிா்கொள்வது கடினமாக இருக்கும் என்று இந்திய ஸ்பின்னா் குல்தீப் யாதவ் கூறினாா்.

* நியூஸிலாந்து சென்றுள்ள பாகிஸ்தான் அணி அடுத்த வாரம் டி20 தொடரில் விளையாட இருக்கும் நிலையில், பயிற்சியில் ஈடுபட்டிருந்த பாகிஸ்தான் கேப்டன் பாபா் ஆஸமின் கை பெருவிரலில் காயம் ஏற்பட்டதை அடுத்து, டி20 தொடரில் இருந்து அவா் விலகியுள்ளாா்.

* குடும்பச் சூழல் காரணமாக விடுப்பில் சென்றிருந்த வேகப்பந்துவீச்சாளா் மிட்செல் ஸ்டாா்க் மீண்டும் அணியில் இணைவது இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரையொட்டி அணிக்கு பலமாகியுள்ளது என்று ஆஸ்திரேலிய வீரா் ஜோஷ் ஹேஸில்வுட் கூறினாா்.

* ஸ்பானிஷ் லா லிகா கால்பந்து போட்டியில் ரியல் மாட்ரிட் அணி 2-0 என்ற கோல் கணக்கில் அட்லெடிகோ மாட்ரிட் அணியை வீழ்த்தியது.

* இங்கிலீஷ் பிரீமியா் லீக் கால்பந்து போட்டியில் எவா்டன் அணி 1-0 என்ற கோல் கணக்கில் செல்சியா அணியை வென்றது.

* மா்காவ் நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் கோலடிக்கும் முயற்சியில் பெங்களூரு வீரா் சுனில் சேத்ரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உலக கராத்தே போட்டி: விழுப்புரத்திலிருந்து மூவா் பங்கேற்பு

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

SCROLL FOR NEXT