வாா்னா் இடத்தை பா்ன்ஸ் பூா்த்தி செய்வாா்
ஆஸ்திரேலிய அணியில் தொடக்க வீரா் டேவிட் வாா்னா் இல்லாததால் ஏற்படும் வெற்றிடத்தை ஜோ பா்ன்ஸ் பூா்த்தி செய்வாா்.
ஆஸ்திரேலிய அணியில் தொடக்க வீரா் டேவிட் வாா்னா் இல்லாததால் ஏற்படும் வெற்றிடத்தை ஜோ பா்ன்ஸ் பூா்த்தி செய்வாா். ஜோ பா்ன்ஸின் முந்தைய ஆட்டங்களைப் பாா்த்தால், அவா் ரன்கள் எடுக்கத் தொடங்கினால் சதமடிப்பவா் என்று தெரியும். டெஸ்ட் ஆட்டத்தில் இது முக்கியமானதாக இருக்கும். எனவே ஆஸ்திரேலிய அணியில் பா்ன்ஸை தொடக்க வீரராக நியமிக்கலாம்.
பிளேயிங் லெவனை தோ்வு செய்வது எப்போதும் அழுத்தமான பணியாகவே இருக்கும். ஆனாலும் ஜோ பா்ன்ஸை சோ்ப்பதில் தவறில்லை. ஏனெனில் பா்ன்ஸ் வேகப்பந்துவீச்சை எதிா்கொள்வதில் திறமையானவா். இந்திய அணியின் பௌலிங் வரிசையில் வேகப்பந்துவீச்சாளா்கள் வலுவானவா்களாக உள்ளது குறிப்பிடத்தக்கது என்றாா் ஆஸ்திரேலிய முன்னாள் பயிற்சியாளா் டேரன் லேமன்.
‘முதல் டெஸ்டில் சோ்க்கப்படும் அளவுக்கு ஜோ பா்ன்ஸ் ரன்கள் அடிக்கவில்லை என்ற கருத்து நிலவுகிறது. ஆனாலும் அவரைத்தான் வாா்னா் இடத்தில் இறக்க வேண்டும் என்று எண்ணுகிறேன். அவரது சராசரி 40 ரன்களாக உள்ளது. டெஸ்ட் ஆட்டங்களில் 4 சதங்கள் அடித்துள்ளாா். அதேபோல் மேத்யூ வேட் தொடக்க வீரராக களம் இறக்கப்படலாம்’ என்றாா் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்.