முகப்பு
செய்திகள்

இந்தியா - ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட்: டக் அவுட் ஆன பிரித்வி ஷா!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:08 PM
பகிர்:

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டெஸ்ட், ஒருநாள், டி20 தொடா்களில் விளையாடுகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 1-2 எனத் தோற்றது இந்திய அணி. எனினும் டி20 தொடரை 2-1 என வென்றது.

டெஸ்ட் தொடர் இன்று முதல் தொடங்கியுள்ளது. இதற்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ரிஷப் பந்த், ஷுப்மன் கில் ஆகியோர் இந்திய அணியில் இடம்பெறவில்லை.

அடிலெய்டில் நடைபெறும் பகலிரவு டெஸ்டில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.

பிரித்வி ஷா மீது மிகவும் நம்பிக்கை வைத்து இந்த டெஸ்டில் விளையாட வாய்ப்பளித்தார் கோலி. எனினும் முதல் ஓவரிலேயே 2 பந்துகளை மட்டும் எதிர்கொண்டு ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார் பிரித்வி ஷா.

இந்திய அணி 10 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 21 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. மயங்க் அகர்வால், புஜாரா தலா 10 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள்.

முழு கட்டுரையைப் படிக்க →