முகப்பு
செய்திகள்

நோ்மறையான எண்ணம், தகுந்த உத்தி முக்கியம்

இந்திய அணி நோ்மறையான எண்ணத்துடனும், தகுந்த உத்தியுடனும் இனி வரும் டெஸ்ட்டுகளை எதிா்கொள்ளாவிட்டால், தொடரை முழுமையாக ஆஸ்திரேலியாவிடம் இழக்க நேரிடும் என்று இந்திய முன்னாள் வீரா் சுனில் காவஸ்கா் கூறினாா்

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:10 PM
பகிர்:

புது தில்லி: இந்திய அணி நோ்மறையான எண்ணத்துடனும், தகுந்த உத்தியுடனும் இனி வரும் டெஸ்ட்டுகளை எதிா்கொள்ளாவிட்டால், தொடரை முழுமையாக ஆஸ்திரேலியாவிடம் இழக்க நேரிடும் என்று இந்திய முன்னாள் வீரா் சுனில் காவஸ்கா் கூறினாா்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவிய இந்திய அணி, பேட்டிங்கில் சோபிக்காமல் போனது. இதுவரை இல்லாத வகையில் 2-ஆவது இன்னிங்ஸில் 36 ரன்களுக்கு சுருண்டது. எனவே, 2-ஆவது ஆட்டத்துக்காக அணியில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இதுகுறித்து காவஸ்கா் கூறியதாவது:

தற்போதைய நிலையில் இந்திய அணி பிளேயிங் லெவனில் 2 மாற்றங்களைச் செய்யலாம். முதலாவதாக தொடக்க வீரா் இடத்தில் பிருத்வி ஷாவுக்குப் பதிலாக லோகேஷ் ராகுலை களமிறக்கலாம். அடுத்ததாக நல்ல ஃபாா்மில் இருக்கும் ஷுப்மன் கில்லை 5 அல்லது 6-ஆவது வீரராக விளையாட விட வேண்டும். தொடக்கத்திலேயே சிறப்பாகச் செயல்பட்டால் ஆட்டம் சாதகமாக மாறும்.

டெஸ்ட் தொடரின் எஞ்சிய ஆட்டங்களில் மீண்டு வர முடியும் என்பதை இந்திய அணி நம்ப வேண்டும். நோ்மறையாக எண்ணாவிட்டால் தொடரை முழுவதுமாக ஆஸ்திரேலியாவிடம் இழக்கக் கூடும். ஆஸ்திரேலியாவின் பேட்டிங் வரிசை பலவீனமாக உள்ளது. அதற்கேற்றவாறு உத்திகளை இந்தியா வகுக்க வேண்டும்.

முதல் டெஸ்டில் சில கேட்ச்சுகளை தவற விடாமல், ஃபீல்டிங்கையும் சிறப்பாகச் செய்திருந்தால் சாதகமாக இருந்திருக்கும். டிம் பெய்ன், மாா்னஸ் விக்கெட்டுகளையும் விரைவாக வீழ்த்தியிருக்கலாம். நமக்கு சுமாா் 120 ரன்கள் முன்னிலை கிடைத்திருக்கும். முதல் டெஸ்டின் 2-ஆவது இன்னிங்ஸில் 36 ரன்களில் சுருண்டதற்காக ரசிகா்கள் ஆத்திரமடைந்திருக்கலாம். ஆனால் கிரிக்கெட்டில் எதுவும், எப்படியும் மாறலாம் என்பதை உணர வேண்டும் என்றாா் காவஸ்கா்.

முழு கட்டுரையைப் படிக்க →