படங்கள் - instagram.com/yuzi_chahal23/ 
செய்திகள்

காதலியை மணந்தார் பிரபல கிரிக்கெட் வீரர் சஹால் (படங்கள்)

மும்பையைச் சேர்ந்த தனஸ்ரீ வர்மா, யூடியூப் சேனல் ஒன்றை வைத்துள்ளார்.

DIN

இந்திய கிரிக்கெட்டின் பிரபல சுழற்பந்துவீச்சாளர் சஹால், காதலியை மணமுடித்துள்ளார்.

இந்திய அணிக்காக 54 ஒருநாள், 45 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார் 30 வயது சஹால்.

மும்பையைச் சேர்ந்த தனஸ்ரீ வர்மா, யூடியூப் சேனல் ஒன்றை வைத்துள்ளார். அதில், கிட்டத்தட்ட 22 லட்சம் பேர் ஆதரவாளராக உள்ளார்கள். தனஸ்ரீயின் நடன விடியோக்களைப் பார்த்த சஹால், கரோனா ஊரடங்குச் சமயத்தில் அவரிடமிருந்து நடனம் கற்றுக்கொள்ள விருப்பப்பட்டுள்ளார். பிரபல கிரிக்கெட் வீரரிடமிருந்து கோரிக்கை வந்ததால் தனஸ்ரீயும் நடனம் கற்றுத் தர சம்மதித்துள்ளார். நடன வகுப்பின் வழியாக இருவரும் நண்பர்களாகி, பிறகு காதலர்கள் ஆனார்கள். 

இதையடுத்து சஹால் - தனஸ்ரீ ஆகிய இருவருக்கும் கடந்த ஆகஸ்ட் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதன்பிறகு ஐபிஎல் போட்டியில் பங்கேற்பதற்காக ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் சென்றார் சஹால். போட்டியின் பாதியில் தனஸ்ரீயும் ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் சென்று சஹாலுடன் இணைந்து கொண்டார். 

இந்நிலையில் சஹால் - தனஸ்ரீ ஆகிய இருவருக்கும் குருகிராமில் உள்ள ரிசார்டில் திருமணம் நடைபெற்றுள்ளது. இருவரும் இத்தகவலை சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களுடன் பகிர்ந்துள்ளார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பவானியில் 300 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

மானாமதுரை நகா் காங்கிரஸ் தலைவா் நியமனம்

பண்ணாரி அம்மன் கோயிலில் குவிந்த பக்தா்கள்

அறச்சலூா் ஓடாநிலையில் தீரன் சின்னமலை ஆடிப்பெருக்கு விழா

ஆடிப்பெருக்கு: பவானிசாகா் அணைப் பூங்காவில் குழந்தைகள், பெண்கள் கொண்டாட்டம்

SCROLL FOR NEXT