செய்திகள்

சையது முஷ்டாக் அலி கோப்பை:  தமிழக கேப்டன் தினேஷ் கார்த்திக்

சையது முஷ்டாக் அலி கோப்பை டி20 கிரிக்கெட் போட்டிக்கான தமிழக அணி தினேஷ் கார்த்திக் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN


சென்னை: சையது முஷ்டாக் அலி கோப்பை டி20 கிரிக்கெட் போட்டிக்கான தமிழக அணி தினேஷ் கார்த்திக் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது. 
கொல்கத்தாவில் ஜனவரி 10 முதல் நடைபெறவுள்ள இப்போட்டியில் தமிழக அணியின் துணை கேப்டனாக விஜய் சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக வாய்ப்புள்ள வீரர்கள் பட்டியலில் இருந்து தனிப்பட்ட காரணங்களால் விலகுவதாக முரளி விஜய் அறிவித்தார். பெளலர் கே.விக்னேஷுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து, அவருக்குப் பதிலாக ஆர்.எஸ். ஜெகனாத் ஸ்ரீனிவாஸ் இணைந்துள்ளார். 
அணி விவரம்: தினேஷ் கார்த்திக் (கேப்டன்), விஜய் சங்கர், அபராஜித், இந்திரஜித், ஷாருக் கான், ஹரி நிஷாந்த், அருண் கார்த்திக், பிரதோஷ் ரஞ்சன் பால், ஜெகதீசன், அஸ்வின் கிறிஸ்ட், முகமது, பெரியசாமி, சந்தீப் வாரியர், கெளஷிக், சோனு யாதவ், எம். அஸ்வின், சாய் கிஷோர், சித்தார்த், சூரியபிரகாஷ், ஜெகனாத் ஸ்ரீனிவாஸ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கலித் ரஹ்மான் இயக்கத்தில் மம்மூட்டி!

ஹரியாணாவில் மிதமான நிலநடுக்கம்

”நெல்லைக்கென 3 Special அறிவிப்புகள்! சொல்லவா?” முதல்வர் மு.க. ஸ்டாலின்

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரைச் சேர்க்க... 12 ஆவணங்கள் எவை?

கொல்கத்தா: சுற்றுப்பயணம் மேற்கொண்ட மெஸ்ஸிக்கு ரூ. 89 கோடி! ஜிஎஸ்டி மட்டும் இவ்வளவா?

SCROLL FOR NEXT