முகப்பு
அஸ்வின்
செய்திகள்

2-வது டெஸ்ட்: இந்திய அணி அபார பந்துவீச்சு, தேநீர் இடைவேளையில் ஆஸ்திரேலியா 136/5

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் தேநீர் இடைவேளையின்போது ஆஸ்திரேலிய அணி, 5 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் எடுத்துள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:13 PM
அஸ்வின்
பகிர்:

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் தேநீர் இடைவேளையின்போது ஆஸ்திரேலிய அணி, 5 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் எடுத்துள்ளது. 

ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஆஸ்திரேலியாவுடன் டெஸ்ட், ஒருநாள், டி20 தொடா்களில் விளையாடுகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 1-2 எனத் தோற்றது இந்திய அணி. எனினும் டி20 தொடரை 2-1 என வென்றுள்ளது.

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது ஆஸ்திரேலியா. 

2-வது டெஸ்ட் மெல்போர்னில் இன்று தொடங்கியுள்ளது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் பெயின், பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

ஜோ பர்ன்ஸ் ரன் எதுவும் எடுக்காமல் பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஸ்மித்தும் அதேபோல ரன் எதுவும் எடுக்காமல் அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்ததால் நெருக்கடியில் இருந்தது ஆஸ்திரேலிய அணி. மேத்யூ வேட் 30 ரன்களில் அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். டிராவிஸ் ஹெட்டை 38 ரன்களில் வீழ்த்தினார் பும்ரா. அறிமுக வீரர் சிராஜ், லபுசானேவை 48 ரன்களில் வீழ்த்தி அசத்தினார். இதனால் முதல் ஐந்து விக்கெட்டுகளை 134 ரன்களுக்குள் இழந்தது ஆஸ்திரேலிய அணி.

தேநீர் இடைவேளையின்போது ஆஸ்திரேலிய அணி, 52 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அஸ்வின், பும்ரா தலா 2 விக்கெட்டுகளும் அறிமுக வீரர் சிராஜ் ஒரு விக்கெட்டும் எடுத்தார்கள்.
 
முழு கட்டுரையைப் படிக்க →