செய்திகள்

தலைவன் தோனி: தசாப்தத்தின் ஒருநாள், டி20 அணி அறிவிப்பு

DIN


தசாப்தத்துக்கான ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டனாக ஓய்வுபெற்ற இந்தியக் கிரிக்கெட் ஜாம்பவான் மகேந்திர சிங் தோனி தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

விராட் கோலி தசாப்தத்தின் டெஸ்ட் அணிக்கான கேப்டனாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஐசிசியின் தசாப்தத்துக்கான பரிசளிப்பு விழா காணொலி வாயிலாக திங்கள்கிழமை நடைபெறுகிறது. அதற்கு முன்பாக தசாப்தத்துக்கான டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர்.

ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்கு கேப்டனாக தோனி தேர்வு செய்யப்பட்டுள்ளார். டெஸ்ட் அணிக்கு கேப்டனாக கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது தவிர ஒவ்வொரு அணியில் குறைந்தபட்சம் 2, 3, 4 இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் 3 அணிகளிலும் இடம்பெற்ற ஒரே வீரர் விராட் கோலி மட்டுமே.

டெஸ்ட் அணி:

  • அலெஸ்டர் குக் (இங்கிலாந்து)
  • டேவிட் வார்னர் (ஆஸ்திரேலியா)
  • கேன் வில்லியம்சன் (நியூசிலாந்து)
  • விராட் கோலி (கேப்டன்) (இந்தியா)
  • ஸ்டீவ் ஸ்மித் (ஆஸ்திரேலியா)
  • குமார் சங்கக்காரா (விக்கெட் கீப்பர்) (இலங்கை)
  • பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து)
  • ரவிச்சந்திரன் அஸ்வின் (இந்தியா)
  • டேல் ஸ்டெயின் (தென் ஆப்பிரிக்கா)
  • ஸ்டுவர்ட் பிராட் (இங்கிலாந்து)
  • ஜேம்ஸ் ஆண்டர்சன் (இங்கிலாந்து)

ஒருநாள் அணி:

  • ரோஹித் சர்மா (இந்தியா)
  • டேவிட் வார்னர் (ஆஸ்திரேலியா)
  • விராட் கோலி (இந்தியா)
  • ஏபி டி வில்லியர்ஸ் (தென் ஆப்பிரிக்கா)
  • ஷகிப் அல் ஹசன் (வங்கதேசம்)
  • மகேந்திர சிங் தோனி (கேப்டன் மற்று் விக்கெட் கீப்பர்) (இந்தியா)
  • பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து)
  • மிட்செல் ஸ்டார்க் (ஆஸ்திரேலியா)
  • டிரெண்ட் போல்ட் (நியூஸிலாந்து)
  • இம்ரான் தாஹிர் (தென் ஆப்பிரிக்கா)
  • லசித் மலிங்கா (இலங்கை)

டி20 அணி:

  • ரோஹித் சர்மா (இந்தியா)
  • கிறிஸ் கெயில் (மேற்கிந்தியத் தீவுகள்)
  • ஆரோன் பின்ச் (ஆஸ்திரேலியா)
  • விராட் கோலி (இந்தியா)
  • ஏபி டி வில்லியர்ஸ் (தென் ஆப்பிரிக்கா)
  • கிளென் மேக்ஸ்வெல் (ஆஸ்திரேலியா)
  • மகேந்திர சிங் தோனி (கேப்டன் மற்று் விக்கெட் கீப்பர்) (இந்தியா)
  • கைரன் பொலார்ட் (மேற்கிந்தியத் தீவுகள்)
  • ரஷித் கான் (ஆப்கானிஸ்தான்)
  • ஜாஸ்பிரித் பும்ரா (இந்தியா)
  • லசித் மலிங்கா (இலங்கை)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகரிக்கும் ‘ஹீட் ஸ்ட்ரோக்’ பாதிப்புகள்: மருத்துவமனைகளில் சிறப்பு வாா்டு - ஓஆா்எஸ் கரைசல்

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல் பிரசாரம் நிறைவு -குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் நாளை வாக்குப்பதிவு

வெள்ளை மாளிகை பாதுகாப்பு தடுப்பில் மோதிய காா்: ஓட்டுநா் உயிரிழப்பு

கோடையில் நீா்ச்சத்து இழப்பை தவிா்க்க மோா், கூழ், இளநீா் பருகுவது அவசியம்: சித்த மருத்துவா் சோ.தில்லைவாணன்

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: விசாரணையை புறக்கணிக்க ஊழியா்களுக்கு உத்தரவு

SCROLL FOR NEXT