பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை இம்ரான் கான் வழிநடத்தியது போல விராட் கோலி செயல்படுகிறார் என்று முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பாராட்டியுள்ளார்.
நியூஸிலாந்துக்கு எதிரான டி20 தொடரை 5-0 என வென்றுள்ளது இந்திய அணி. இந்த வெற்றி குறித்து முன்னாள் வீரரும் கிரிக்கெட் வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கர், ட்விட்டரில் கூறியதாவது:
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் அணியை நினைவுபடுத்துகிறது. வலுவான தன்னம்பிக்கையுடன் இந்திய அணி உள்ளது. தோற்கும் நிலைமையிலிருந்தபோது வெவ்வேறு வழிகளைக் கண்டுபிடித்து இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது. தன்னம்பிக்கை வலுவாக இருந்தால் மட்டுமே அது சாத்தியம் என்று இந்திய அணியைப் பாராட்டியுள்ளார். இந்தத் தொடரின் மூலம் பேட்ஸ்மேன் - கீப்பராக அருமையாகச் செயல்பட்ட கே.எல். ராகுலின் திறமையை இந்திய அணி கண்டுபிடித்துள்ளது. அபாரமாக அவர் விளையாடினார் என்றும் மஞ்ச்ரேக்கர் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.