செய்திகள்

பிரித்வி ஷா - மயங்க் அகர்வால் தொடக்க வீரர்களாக விளையாடுவார்கள்: விராட் கோலி அறிவிப்பு!

நியூஸிலாந்து மண்ணில் இரு புதிய தொடக்க வீரர்களுடன் களமிறங்கவுள்ளது இந்திய அணி.

எழில்

கடந்த சில வருடங்களாக இந்திய ஒருநாள் அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா, ஷிகர் தவன், ராகுல் ஆகியோரை மட்டுமே பார்த்த நிலையில் நியூஸிலாந்து மண்ணில் இரு புதிய தொடக்க வீரர்களுடன் களமிறங்கவுள்ளது இந்திய அணி. இதுகுறித்து இந்திய கேப்டன் விராட் கோலி கூறியதாவது:

பிரித்வி ஷா தொடக்க வீரராக விளையாடுவார். ரோஹித்துக்கான மாற்று வீரர், தொடக்க வீரராக இருப்பார். கே.எல். ராகுல் நடுவரிசையில் விளையாடுவார். அந்த நிலையில் அவர் தொடர்ந்து நன்கு விளையாட வேண்டும் என விரும்புகிறோம். அதேபோல விக்கெட் கீப்பராகவும் அவர் செயல்படுவார். 

டெஸ்ட், ஒருநாள், டி20 என எல்லா வகையான கிரிக்கெட் ஆட்டங்களிலும் ரோஹித் சர்மாவின் பெயர் அணிப் பட்டியலில் முதலில் இருக்கும். அவர் டி20 தொடரில் முழுமையாக விளையாடியுள்ளதால் டி20 உலகக் கோப்பைக்காகத் தயாராவதில் எவ்விதச் சிக்கலும் ஏற்படவில்லை. புதிதாக வாய்ப்பு கிடைத்தவர்கள் எப்படி அதை உபயோகிக்கிறார்கள் என்று பார்ப்போம் என்று கூறியுள்ளார்.

3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் நாளை முதல் தொடங்குகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மதிமுக, மமகவுடன் திமுக தொகுதிப் பங்கீடு பேச்சு

பேராவூரணியில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்

ஜாா்க்கண்ட்: விமான விபத்தில் 7 போ் உயிரிழப்பு

இலவச வீட்டுமனை கேட்டு பொதுமக்கள் ஆா்ப்பாட்டம்

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: உறவினருக்கு 20 ஆண்டுகள் சிறை

SCROLL FOR NEXT