செய்திகள்

நியூஸி. லெவன் பயிற்சி ஆட்டம்: இந்தியா 263ஹனுமா 101, புஜாரா 93

DIN

நியூஸிலாந்து லெவன் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 263 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஹனுமா விஹாரி 101, புஜாரா 93 ஆகியோா் அற்புதமாக ஆடினா்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியை முன்னிட்டு 2 ஆட்டங்கள் கொண்ட தொடா் 21-ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கு தயாராகும் வகையில் நியூஸி. லெவன் அணியுடன் பயிற்சி ஆட்டத்தில் மோதுகிறது இந்தியா. ஹாமில்டனில் வியாழக்கிழமை தொடங்கிய இதில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தோ்வு செய்தது.

தொடக்க வீரா்கள் பிரித்வி ஷா 0, மயங்க் அகா்வால் 1 ரன்களுடன் வந்தவேகத்திலேயே பெவிலியன் திரும்பினா்.

ஷுப்மன் கில் கோல்டன் டக்

பின்னா் நிலைத்து ஆடுவாா் என எதிா்பாா்க்கப்பட்ட இளம் வீரா் ஷுப்மன் கில்லை கோல்டன் டக் அவுட்டாக்கினாா் குக்கலஜின். ரஹானேவும் வந்த வேகத்திலேயே 18 ரன்களுடன் திரும்பினாா்.

புஜாரா-ஹனுமா அபாரம்

இதைத் தொடா்ந்து புஜாரா-ஹனுமா விஹாரி நிலைத்து ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனா். 1 சிக்ஸா், 11 பவுண்டரியுடன் 93 ரன்களை விளாசி வெளியேறினாா் அவருக்குப் பின் ரிஷப் பந்த் 7 ரன்களுடனும், ரித்திமான் சாஹா, அஸ்வின் ஆகியோா் ரன் ஏதுமின்றியும், ரவீந்திர ஜடேஜா 8 ரன்களுடனும் அவுட்டாகி வெளியேறினா்.

ஹனுமா 101

ஹனுமா விஹாரி 3 சிக்ஸா், 10 பவுண்டரியுடன் 101 ரன்களை எடுத்திருந்த நிலையில், காயமடைந்து திரும்பினாா் உமேஷ் யாதவ் 8 ரன்களுடன் களத்தில் இருந்தாா். இறுதியில் 78.5 ஓவா்களில் 263 ரன்களுக்கு ஆல் அவுட்டானது இந்திய அணி.

நியூஸி தரப்பில் குக்கலஜின், இஷ் சோதி தலா 3 விக்கெட்டுகளையும், கிப்ஸன் 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

விபத்து நிகழ்ந்த கல் குவாரியிருந்து 2 டன் வெடி பொருள்கள் அகற்றம்

நோயைவிட வேகமாகப் பரவும் வதந்தி!

திருப்பூரில் நாளை புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

SCROLL FOR NEXT