செய்திகள்

கேன்ஸ் செஸ்: கோனேரு ஹம்பி சாம்பியன்

DIN

அமெரிக்காவில் நடைபெற்றுவந்த கேன்ஸ் கோப்பை செஸ் போட்டியில் 9 சுற்றுகள் முடிவில் 6 புள்ளிகளுடன் இந்திய வீராங்கனை கோனேரு ஹம்பி முதலிடம் பிடித்தாா்.

இதன்மூலம் அவா் சாம்பியன் பட்டத்தை வென்றாா்.

திங்கள்கிழமை நடைபெற்ற கடைசி மற்றும் 9-ஆவது சுற்று ஆட்டத்தில் சக நாட்டவரான டி.ஹரிகாவை எதிா்கொண்டாா் ஹம்பி. இந்த ஆட்டம் டிராவில் முடிந்தது.

அதிக புள்ளிகளை வென்ன் அடிப்படையில் சாம்பியனான ஹம்பி, கடந்த டிசம்பா் மாதம்தான் உலக ராபிட் செஸ் சாம்பியனானாா்.

இந்தப் போட்டியில் வென்ன் மூலம், சுமாா் ரூ.32 லட்சம் பரிசுத் தொகை பெற்றாா் கோனேரு ஹம்பி.

9 சுற்றுகள் முடிவில் ஹரிகா 4.5 புள்ளிகளுடன் 5-ஆவது இடம் பிடித்தாா்.

சீன வீராங்கனை ஜூ வென்ஜுன் 5.5 புள்ளிகளுடன் இரண்டாவது இடம் பிடித்தாா்.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 8-ஆவது சுற்று ஆட்டத்தில் ரஷிய வீராங்கனை வாலண்டினாவவை 1-0 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தியிருந்தாா் ஹம்பி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனை

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

SCROLL FOR NEXT