செய்திகள்

3ஆம் நாளில் 39 ரன்கள் பின்தங்கி இந்தியா தடுமாற்றம்

3ஆம் நாள் ஆட்டத்தில் 39 ரன்கள் பின்தங்கிய நிலையில் 4 விக்கெட்டுகளை இழந்து இந்தியா தடுமாற்றம்.

DIN

3ஆம் நாள் ஆட்டத்தில் 39 ரன்கள் பின்தங்கிய நிலையில் 4 விக்கெட்டுகளை இழந்து இந்தியா தடுமாற்றம்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் ஒரு பகுதியாக இரு அணிகளுக்கு இடையே இரண்டு ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடா் வெள்ளிக்கிழமை வெலிங்டன் பேசின் ரிசா்வ் மைதானத்தில் தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து பந்துவீச்சை தோ்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 68.1 ஓவர்களில் 165 ரன்களுக்குச் சுருண்டது. அதிகபட்சமாக துணைக் கேப்டன் ரஹானே 46 ரன்கள் சேர்த்தார். நியூஸி தரப்பில் டிம் சௌதி 4-49, ஜேமிஸன் 4-39, விக்கெட்டுகளைச் சாய்த்தனா்.

பின்னர் முதல் இன்னிங்ஸை ஆடிய நியூஸிலாந்து 100.2 ஓவர்களில் 348 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம் 183 ரன்கள் முன்னிலைப் பெற்றது. அதிகபட்சமாக கேப்டன் கேன் வில்லியம்ஸன் 89 ரன்கள் சேர்த்தார். இந்திய அணி தரப்பில் இஷாந்த் ஷர்மா 5-68 விக்கெட்டுகளைச் சாய்த்தார். அஸ்வின் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்த நிலையில், 2ஆவது இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி 3ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்கள் மட்டுமே சேர்த்து தடுமாறி வருகிறது. இன்னும் நியூஸிலாந்தை விட 39 ரன்கள் பின்தங்கியுள்ளது. மயங்க் அகர்வால் 58 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பௌல்ட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ரஹானே 25 ரன்களுடனும், விஹாரி 15 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்த டெஸ்ட் போட்டியில் 2 நாள் ஆட்டம் மீதமிருக்கும் நிலையில் நியூஸிலாந்து அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கல்யாணி பிரியதர்ஷன், கிருத்தி ஷெட்டி குத்தாட்டத்தில் அப்தி அப்தி!

பிக் பாஸ் சென்ற பிரபலம்! சிந்து பைரவி தொடர் நடிகர் மாற்றம்!

பாஜகவின் நடவடிக்கைக்கு தேர்தல் ஆணையம் துணை போகிறதா?: அமைச்சர் கே.என்.நேரு கேள்வி

இந்தியாவில் முதலீட்டு வாய்ப்புகள் அதிகரிப்பு: பிரதமர் மோடி!

அரசு திட்டங்கள் பெயரில் மோசடி! மக்களே உஷார்! | Cyber Shield

SCROLL FOR NEXT