செய்திகள்

மகளிர் டி20 உலகக் கோப்பை: மீண்டும் அதிரடியாக விளையாடிய ஷஃபாலி! இந்தியா 133 ரன்கள்

எழில்

நியூஸிலாந்துக்கு எதிரான மகளிர் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணி ரன்கள் 8 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்துள்ளது.

மெல்போர்னில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

மந்தனா 11 ரன்களில் ஆட்டமிழக்க, வழக்கம்போல தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார் 16 வயது ஷஃபாலி. அன்னா பீட்டர்சன் வீசிய 5-வது ஓவரில் அடுத்தடுத்து இரு சிக்ஸர்கள் அடித்தார். 6 ஓவர்களில் இந்திய அணி 49/1 ரன்கள் எடுத்தது. ஆரம்பம் நன்றாக அமைந்தாலும் நடு ஓவர்களில் இந்திய அணி மோசமாக விளையாடியது. தானியா பாட்டியா 23 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்ததால் ரன்கள் எடுக்கும் வேகமும் குறைந்தது.

ரோட்ரிகஸ் 10 ரன்களிலும் கெளர் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தார்கள். 34 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்  ஷஃபாலி. வேதா கிருஷ்ணமூர்த்தி 6 ரன்களிலும் தீப்தி சர்மா 8 ரன்களிலும் ஆட்டமிழந்தார்கள். ராதா யாதவ் 14 ரன்கள் எடுத்து கடைசிப் பந்தில் ரன் அவுட் மூலம் வெளியேறினார். 

இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்துள்ளது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றால் அரையிறுதிக்குத் தகுதி பெற்றுவிடும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

SCROLL FOR NEXT