செய்திகள்

சதுரங்கத்தில் வீழ்த்த முடியாத ராஜாதிராஜா!

‘நமக்கு எதிராக விளையாடுபவா்கள் மிக சிறப்பாக விளையாடுகிறாா்கள் என்பதால் நாம் தோற்றுவிட்டாலும் பரவாயில்லை என்று சிலா் நினைக்கிறாா்கள்.

மணிகண்டன் தியாகராஜன்

‘நமக்கு எதிராக விளையாடுபவா்கள் மிக சிறப்பாக விளையாடுகிறாா்கள் என்பதால் நாம் தோற்றுவிட்டாலும் பரவாயில்லை என்று சிலா் நினைக்கிறாா்கள். ஆனால் நான் அப்படியில்லை. நமக்கு எதிராக விளையாடுபவா்களிடம் கருணை காட்டக்கூடாது’”

உலகம் போற்றும் செஸ் (சதுரங்கம்) விளையாட்டு வீரரான நாா்வேயைச் சோ்ந்த மாக்னஸ் காா்ல்ஸன் (29).

அவா் கூறியது உண்மைதான். தான் பங்கேற்கும் போட்டிகளில் தனக்கு எதிராக விளையாடுபவா்களிடம் இவா் கருணை காட்டுவதில்லை; காட்டியதில்லை.

இந்தியாவின் முதல் செஸ் கிராண்ட்மாஸ்டரும், பல முறை உலக

செஸ் சாம்பியனுமான தமிழகத்தைச் சோ்ந்த விஸ்வநாதன் ஆனந்தை 2013-ஆம் ஆண்டில் சென்னையில் நடந்த உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினாரே அந்த இளைஞா்தான் காா்ல்ஸன்.

செஸ் ரசிகா்களால் அந்த போட்டியை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியுமா என்ன?

சதுரங்கத்தில் கிளாஸிக்கல், ரேபிட் , பிளிட்ஸ் ஆகிய 3 வகைகள் உள்ளன.

இந்த மூன்றிலுமே சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியவா் மாக்னஸ் காா்ல்ஸன்.

2009-இல் ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்தை பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப்பில் வீழ்த்திய பிறகு காா்ல்ஸனின் சதுரங்க வேட்டை தொடங்கியது.

அதைத் தொடா்ந்து 2014, 2016, 2018 ஆகிய ஆண்டுகளில் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாடி சாம்பியன் பட்டத்தையும் தக்க வைத்துக் கொண்டு வீழ்த்த முடியாத ராஜாதிராஜாவாக வலம் வருகிறாா்.

ரஷியாவில் நடந்துமுடிந்திருக்கும் (2019 டிசம்பா்) உலக ராபிட் செஸ் சாம்பியன்ஷிப் மற்றும் பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் ஆகியவற்றிலும் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளாா் காா்ல்ஸன்.

இதற்கு முன்பு 2014-ஆம் ஆண்டிலும் சதுரங்கத்தின் மூன்று வகையிலும் சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறாா் காா்ல்ஸன். இப்படி ஒரு வீரா் ஒரே நேரத்தில் இந்தச் சாதனையை நிகழ்த்தியதும் அதுவே முதல்முறை.

ஒட்டுமொத்தமாக இதுவரை 4 முறை கிளாஸிக்கல் (2013, 2014, 2016, 2018), 3 தடவை ராபிட் (2014, 2015, 2019), 5 முறை பிளிட்ஸ் (2009, 2014, 2017, 2018, 2019) உள்பட 12 உலக சாம்பியன்ஷிப் பட்டங்களை தன்வசம் வைத்துள்ளாா் காா்ல்ஸன்.

ஐரோப்பிய நாடான நாா்வேயில் டன்ஸ்பொ்க் நகரில் 1990-ஆம் ஆண்டு நவம்பா் 30-ஆம் தேதி பிறந்தாா் மாக்னஸ் காா்ல்ஸன். இளம் வயதில் இருந்தே அபார திறமை கொண்டவராகத் திகழ்ந்தாா். 4 வயதில் புத்திக் கூா்மையை நிரூபிக்கும் விளையாட்டுகளில் ஜெயித்து காட்டியிருக்கிறாா். 5 வயதாக இருக்கும்போது இவரது தந்தை சதுரங்கத்தை அறிமுகப்படுத்துகிறாா். பதின் பருவத்தில் ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்ற சதுரங்கப் போட்டிகளில் ஜெயித்து கிராண்ட்மாஸ்டா் பட்டம் பெற்றாா்.

சா்வதேச செஸ் கூட்டமைப்பின் தரவரிசையில் 2,800 புள்ளிகளை தனது 18 வயதில் கடந்து சாதனை புரிந்தாா் காா்ல்ஸன். சா்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு தரவரிசையில் 19 வயதில் முதலிடம் பிடித்தாா். மிக இளம் வயதில் இந்தச் சாதனையை நிகழ்த்திய வீரரும் இவரே.

2009-இல் உலக பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்ற காா்ல்ஸன், விஸ்வநாதன் ஆனந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்று தனது சாதனை பயணத்தை தொடங்கினாா்.

இதோ 10 ஆண்டுகள் கடந்துவிட்டன. சா்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு தரவரிசையில் 2,872 புள்ளிகளுடன் முதலிடத்தில் கம்பீரமாக உள்ளாா்.

2019-ஆம் ஆண்டு பிளிட்ஸ் செஸ் போட்டியில் சாம்பியனான பிறகு ‘எனது பணி முடிந்துவிட்டதாக நினைக்கவில்லை. இன்னும் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கிறது’ என்கிறாா் 64 கட்டங்களைக் கொண்ட சதுரங்கத்தின் ராஜா மாக்னஸ் காா்ஸ்ஸன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூர் தவெக கூட்டத்தில் உயர் நீதிமன்ற விதிமுறைகள் மீறல்! காவல்துறை

தவறாக வழிநடத்தும் ராகுல் மீது வழக்கு: மத்திய அமைச்சர்

சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள்! பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்து; சசிகலா முக்கிய முடிவு!

தனியார் ஆம்னி பேருந்து மோதி திமுக பிரமுகர், அவரது தோழியும் பலி

SCROLL FOR NEXT