செய்திகள்

பயிற்சியின்போது கால்பந்து விளையாடக் கூடாது: கிரிக்கெட் வீரர்களுக்குக் கட்டளை!

கிரிக்கெட் ஆட்டத்துக்கான பயிற்சியின்போது கால்பந்து விளையாட்டில் வீரர்கள் ஈடுபடக் கூடாது என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கட்டளையிட்டுள்ளது. 

எழில்

கிரிக்கெட் ஆட்டத்துக்கான பயிற்சியின்போது கால்பந்து விளையாட்டில் வீரர்கள் ஈடுபடக் கூடாது என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கட்டளையிட்டுள்ளது. 

இங்கிலாந்து கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி தோல்வியடைந்துள்ளது.

இந்நிலையில் 2-வது டெஸ்டுக்கான பயிற்சியின்போது இங்கிலாந்து தொடக்க வீரர் ரோரி பர்ன்ஸுக்குக் காயம் ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்து வீரர்கள் பயிற்சியின்போது கால்பந்து ஆட்டத்தை விளையாடினார்கள். அப்போது, பர்ன்ஸுக்குக் காயம் ஏற்பட்டது. இதனால் டெஸ்ட் தொடரிலிருந்து அவர் விலகியுள்ளார். 

பயிற்சியின்போது கால்பந்து ஆட்டம் விளையாடி பல இங்கிலாந்து வீரர்கள் காயமடைந்துள்ளார்கள். சமீபகாலங்களில் கால்பந்து பயிற்சி ஆட்டங்களின்போது ஜானி பேர்ஸ்டோவ், ஜோ டென்லி, ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இங்கிலாந்து வீரர்கள் இனிமேல் பயிற்சியின்போது கால்பந்து விளையாட்டில் ஈடுபடக் கூடாது என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தனது வீரர்களுக்குக் கட்டளையிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தி பாரடைஸ் ஃபர்ஸ்ட் சிங்கிள் விடியோ!

நாளை சென்னை வருகிறார் ஞானேஷ்குமார்?

நல்லகண்ணுவுக்கு அதிதீவிர சிகிச்சை : மருத்துவமனை தகவல்

ஃபர்ஹான் அதிரடி: இங்கிலாந்துக்கு 165 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்!

சென்னைக்கு 16 தேர்தல் கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்!

SCROLL FOR NEXT