செய்திகள்

சென்னை விலங்குகள் சிகிச்சை மையத்துக்கு ரூ. 2 லட்சம் வழங்கிய கே.எல். ராகுல்!

இப்போது மட்டும் அவர் உதவவில்லை. எப்போதும் எங்களுக்கு ஆதரவாக உள்ளார்...

எழில்

2-வது ஒருநாள் ஆட்டத்தில் தனக்குக் கிடைத்த ஆட்ட நாயகனுக்கான பரிசுத்தொகை ரூ. 1 லட்சம் உள்ளிட்ட ரூ. 2 லட்சத்தை உதவித்தொகையாக சென்னை பெசன்ட் நகரில் உள்ள பெசன்ட் நினைவு விலங்குகள் சிகிச்சை மையத்துக்கு வழங்கியுள்ளார் பிரபல கிரிக்கெட் வீரர் கே.எல். ராகுல்.

ராஜ்கோட்டில் நடைபெற்ற இந்தியா -  ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் ஆட்டத்தில் சிறப்பான பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங்குக்காக ஆட்ட நாயகன் விருதையும் ரூ. 1 லட்சம் பரிசுத்தொகையையும் பெற்றார் கே.எல். ராகுல். இந்நிலையில் தனக்குக் கிடைத்த பரிசுத்தொகையுடன் சேர்த்து கூடுதலாக மேலும் ஒரு லட்சத்தையும் சேர்த்து ரூ. 2 லட்சத்தை உதவித்தொகையாக சென்னை பெசண்ட் நகரில் உள்ள விலங்குகள் சிகிச்சை மையத்துக்கு அளித்துள்ளார்.

இதுகுறித்து பெசன்ட் நினைவு விலங்குகள் சிகிச்சை மையம் ஃபேஸ்புக்கில் தெரிவித்துள்ளதாவது:

எங்களுக்கு கே.எல். ராகுல் ரூ. 2 லட்சம் உதவித்தொகை அளித்துள்ளார். இப்போது மட்டும் அவர் உதவவில்லை. எப்போதும் எங்களுக்கு ஆதரவாக உள்ளார் என்று கூறப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!

ஏஐ உச்சி மாநாட்டில் சட்டையைக் கழற்றி போராட்ட விவகாரம்: இளைஞர் காங்கிரஸ் தலைவர் கைது

நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு!

வேலூர் தவெக கூட்டத்தில் உயர் நீதிமன்ற விதிமுறைகள் மீறல்! காவல்துறை

தவறாக வழிநடத்தும் ராகுல் மீது வழக்கு: மத்திய அமைச்சர்

SCROLL FOR NEXT