செய்திகள்

தேர்வுக்குழுத் தலைவர் பதவிக்கு விண்ணப்பித்துள்ள லக்‌ஷ்மண் சிவராமகிருஷ்ணன்!

பிசிசிஐ தேர்வுக்குழுத் தலைவர் பதவிக்கு தமிழகத்தின் லக்‌ஷ்மண் சிவராமகிருஷ்ணன் விண்ணபித்துள்ளார்...

எழில்

பிசிசிஐ தேர்வுக்குழுத் தலைவர் பதவிக்கு தமிழகத்தின் லக்‌ஷ்மண் சிவராமகிருஷ்ணன் விண்ணபித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணிக்கான தேர்வுக்குழுத் தலைவராக உள்ள எம்.எஸ்.கே. பிரசாத், ககன் கோடா ஆகியோரின் பதவிக்காலம் முடிவடைந்தது. ஜதின், தேவங் காந்தி, சரண்தீப் சிங் ஆகியோர் தேர்வுக்குழு உறுப்பினர்களாக மேலும் தொடரவுள்ளார்கள். 

கடந்த 20 வருடங்களாக கிரிக்கெட் வர்ணனையாளராக உள்ள தமிழகத்தின் லக்‌ஷ்மண் சிவராமகிருஷ்ணன் தேர்வுக்குழுத் தலைவர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளார். இவர் இந்திய அணிக்காக 9 டெஸ்டுகள், 16 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.

இவரைத் தவிர முன்னாள் வீரர்களான அமய் கெளரசியா, ராஜேஷ் செளகான் ஆகியோரும் தேர்வுக்குழுப் பதவிக்கு விண்ணப்பித்துள்ளார்கள். தேர்வுக்குழுப் பதவிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசித் தேதியாகும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மே.வங்கத்தில் தரையிறக்க முடியாமல் திரும்பி வந்த பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர்!

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

SCROLL FOR NEXT