செய்திகள்

2-வது டெஸ்ட்: இங்கிலாந்து முதலில் பேட்டிங்

3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது மேற்கிந்தியத் தீவுகள் அணி.

DIN

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 2-வது டெஸ்டில் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது. முதல் டெஸ்டில் வெற்றி பெற மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு 200 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அந்த அணி 64.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் எடுத்து முதல் டெஸ்டில் வெற்றியடைந்தது. பிளாக்வுட் 95 ரன்கள் எடுத்தார். கேப்ரியல் ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார்.

இதனால் 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது மேற்கிந்தியத் தீவுகள் அணி. 2-வது டெஸ்ட் மான்செஸ்டரில் இன்று தொடங்குகிறது. 

2-வது டெஸ்ட் ஆட்டத்துக்கான 13 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறை ஜேம்ஸ் ஆண்டர்சன், மார்க் வுட் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. ஜோ டென்லி நீக்கப்பட்டுள்ளார். ஜோ ரூட் அணியில் மீண்டும் கேப்டனாக இடம்பிடித்துள்ளார். ஸ்டூவர்ட் பிராட் அணியில் மீண்டும் இணைந்துள்ளார். 

இந்நிலையில் மான்செஸ்டரில் இன்று காலை மழை பெய்ததால் டெஸ்ட் ஆட்டத்தின் டாஸ் நிகழ்வு தாமதமானது. டாஸ் வென்ற மே.இ. தீவுகள் அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக ஆட்சியில் நிறையும் இருக்கு, குறையும் இருக்கு!பவர்கட் பிரச்னைக்கு தீர்வில்லை!-பிரேமலதா விஜயகாந்த்

சத்ரபதி சிவாஜி குறித்த புதிய படம்.. தடை செய்ய ஹிந்துத்துவ அமைப்பு வலியுறுத்தல்! ஏன்?

கடைசி நாளில் இங்கிலாந்து அணி பயந்துவிட்டது: இங்கிலாந்து முன்னாள் கேப்டன்

மகனாக நடித்தவரை திருமணம் செய்துகொண்ட சீரியல் நடிகை!

சிபு சோரனின் இறுதிச்சடங்கில் பங்கேற்க ராஞ்சி வந்தடைந்த ராகுல், கார்கே!

SCROLL FOR NEXT