சச்சினுக்கு நாங்கள் வழங்கிய பரிசு: 2011 உலகக் கோப்பை வெற்றி குறித்து விராட் கோலி
2011 உலகக் கோப்பை வெற்றியை சச்சினுக்கு நாங்கள் பரிசாக வழங்கினோம் என இந்திய கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.
2011 உலகக் கோப்பை வெற்றியை சச்சினுக்கு நாங்கள் பரிசாக வழங்கினோம் என இந்திய கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.
2011 உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் இலங்கை அணியை வீழ்த்தி தோனி தலைமையிலான இந்தியா உலக சாம்பியன் ஆனது.
மயங்க் அகர்வாலுடனான பேட்டியில் விராட் கோலி கூறியதாவது:
உலகக் கோப்பையை வென்ற பிறகு நன்றியுணர்ச்சியினால் சச்சினை என் தோளில் தூக்கிக் கொண்டு மைதானத்தை வலம் வந்தேன். எல்லோருடைய உணர்வுகளும் சச்சினைச் சுற்றி தான் இருந்தது. ஏனெனில் இதுதான் உலகக் கோப்பையை அவர் வெல்வதற்கான கடைசி வாய்ப்பு. பல ஆண்டுகளாக இந்தியாவுக்காக அவர் நிகழ்த்திய வெற்றிகளும் ஆட்டங்களும் எங்களுக்கு ஊக்கமாக இருந்தன. அதனால் 2011 உலகக் கோப்பை வெற்றி என்பது சச்சினுக்கு நாங்கள் அளித்த பரிசாகும்.
இதற்கு முன்பு அவர் தொடர்ந்து நமக்கு வழங்கிக் கொண்டிருந்தார். இந்தத் தருணம் ஒரு பரிபூரண உணர்வைத் தந்து என்றார்.