செய்திகள்

139 நாள்கள் கழித்து இன்று நடைபெறும் சர்வதேச ஒருநாள் ஆட்டம்!

கடந்த 139 நாள்களாக சர்வதேச ஒருநாள் ஆட்டம் எதுவும் நடைபெறவில்லை.

DIN

கடந்த மார்ச் 13 அன்று ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் ஆட்டம் சிட்னியில் நடைபெற்றது. 71 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வென்றது.

இதன் பிறகு கரோனா அச்சுறுத்தல் காரணமாக சர்வதேச கிரிக்கெட் தொடர்கள் ஒத்திவைக்கப்பட்டன.

இதனால் கடந்த 139 நாள்களாக சர்வதேச ஒருநாள் ஆட்டம் எதுவும் நடைபெறவில்லை. இந்நிலையில் இங்கிலாந்து - அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று முதல் தொடங்குகிறது. முதல் ஒருநாள் ஆட்டம் செளதாம்ப்டனில் இன்று நடைபெறுகிறது. இதனால் நான்கு மாதங்களுக்கும் மேலாக சர்வதேச ஒருநாள் ஆட்டத்தைக் காணாமல் இருந்த ரசிகர்களுக்கு மீண்டும் பரபரப்பான ஒருநாள் ஆட்டங்களைக் காணும் வாய்ப்பு கிடைத்துள்ளது. 

இந்த ஒருநாள் தொடர், உலகக் கோப்பை சூப்பர் லீக்கின் முதல் தொடராக இருக்கும் என்று ஐசிசி அறிவித்துள்ளது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக காலி மைதானத்தில் 3 ஒருநாள் ஆட்டங்களும் நடைபெறவுள்ளன. இங்கிலாந்து டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ள ஆர்ச்சர், மார்க் வுட், ஜாஸ் பட்லர், ஸ்டோக்ஸ், ரூட் ஆகியோர் இந்த ஒருநாள் தொடரில் இடம்பெறவில்லை. எனினும் இயன் மார்கன், ஜேசன் ராய், மொயீன் அலி, பேர்ஸ்டோவ் எனப் பிரபல வீரர்கள் இந்த ஆட்டத்தில் விளையாடுகிறார்கள். 

இந்திய நேரம் மாலை 6.30 மணிக்கு இந்த ஒருநாள் ஆட்டம் தொடங்கவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம், வெள்ளி குறைவு! இன்றைய நிலவரம்..!

திருப்பரங்குன்றம் விவகாரம் மதப் பிரச்னை அல்ல; அது ஈகோ பிரச்னை: தமிழிசை பேட்டி

சென்னையில் கடும் பனி! ரயில்கள் தாமதம்; விமானங்கள் ரத்து!

நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 1,00,008 வடைமாலை அலங்காரம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

வங்கதேசத்தில் இந்திய தூதரகம், தூதர் வீட்டின் மீது கல்வீச்சு!

SCROLL FOR NEXT