செய்திகள்

உலகக் கோப்பைக்கான இங்கிலாந்து அணியில் இடம்பெறாதது குறித்து டேவிட் வில்லி கருத்து

அயர்லாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதற்கு முக்கியக் காரணம்...

DIN

அயர்லாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதற்கு முக்கியக் காரணம், டேவிட் வில்லி. 30 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகள் எடுத்தார்.

அயர்லாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அயர்லாந்து அணி 44.4 ஓவர்களில் 172 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பிறகு விளையாடிய இங்கிலாந்து அணி 27.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 174 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

கடந்த வருடம் இங்கிலாந்தில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டியில் இங்கிலாந்து அணியில் டேவிட் வில்லி இடம்பெறவில்லை. அவருக்குப் பதிலாக ஆர்ச்சர் தேர்வானார். இதுபற்றி டேவிட் வில்லி கூறியதாவது:

இங்கிலாந்து அணியில் கடந்த நான்கு வருடங்களாகப் பயணித்து வந்தேன். கடைசி நேரத்தில் உலகக் கோப்பை அணியில் இடம்பெறாமல் போனதை ஏற்றுக்கொள்ளக் கடினமாக இருந்தது. மைதானத்துக்குச் சென்று ஒவ்வொரு தருணத்தையும் வாழ்ந்து பார்க்க விருப்பப்படுகிறேன். எல்லா வாய்ப்புகளையும் கடைசி வாய்ப்பாகப் பார்க்கிறேன். சந்தோஷமாக விளையாடும்போது சிறந்த ஆட்டத்திறனை வெளிப்படுத்தவேண்டும். அப்படிச் செய்யும்போது சாதகமான முடிவுகள் கிடைக்கின்றன என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்காவுடன் விரைவில் இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை: இந்தியா நம்பிக்கை

நாளைய மின்தடை

ஆளுநா் மாளிகை சிவப்பு மண்டலமாக அறிவிப்பு

‘ஹெச்1பி’ விசா நடைமுறையில் மீண்டும் மாற்றம்: டிரம்ப் நிர்வாகம் அதிரடி

ரஷியாவின் தாக்குதலில்.. மூழ்கியது உக்ரைனின் மிகப் பெரிய கடற்படைக் கப்பல்!

SCROLL FOR NEXT