செய்திகள்

ஐசிசி டெஸ்ட் தரவரிசை: தொடர்ந்து 2-வது இடத்தில் நீடிக்கும் விராட் கோலி

DIN


ஐசிசியின் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான பேட்டிங் தரவரிசையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தொடர்ந்து இரண்டாவது இடத்தில் நீடித்து வருகிறார். 

நியூஸிலாந்து, இந்தியா அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர் நிறைவடைந்த நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான தரவரிசையை ஐசிசி வெளியிட்டுள்ளது. நியூஸிலாந்துடனான தொடரை 0-2 என்ற கணக்கில் இழந்தபோதிலும் இந்திய அணி 116 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறது. 110 புள்ளிகளுடன் நியூஸிலாந்து அணி 2-வது இடத்திலும், 108 புள்ளிகளுடன் ஆஸ்திரேலிய அணி 3-வது இடத்திலும் உள்ளன.

பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்தியக் கேப்டன் விராட் கோலி தொடர்ந்து இரண்டாவது இடத்திலேயே நீடிக்கிறார். நியூஸிலாந்து தொடக்க ஆட்டக்காரர் பிளண்டெல் 4 இன்னிங்ஸில் ஒரு அரைசதம் உட்பட 117 ரன்கள் எடுக்க தரவரிசையில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளார். அவர் 27 இடங்கள் முன்னேறி 46-வது இடத்தைப் பிடித்துள்ளார். இந்திய அணியின் இளம் தொடக்க ஆட்டக்காரர் பிரித்வி ஷா 17 இடங்கள் முன்னேற்றம் கண்டு 76-வது இடத்தில் உள்ளார்.

ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் விராட் கோலியைவிட 25 புள்ளிகள் கூடுதலாகப் பெற்று 911 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். மற்றொரு ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லாபுஷேன் நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்ஸனைப் பின்னுக்குத் தள்ளி மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில், இந்தியாவுடனான தொடரில் தொடர் நாயகன் விருது வென்ற டிம் சௌதி இரண்டு இடங்கள் முன்னேறி முதல் 5 இடங்களுக்குள் நுழைந்து 4-வது இடத்தில் உள்ளார். அதேசமயம், இந்தியா மற்றும் நியூஸிலாந்தின் பிரதான முக்கிய வேகப்பந்துவீச்சாளர்கள் முறையே ஜாஸ்பீரீத் பூம்ரா மற்றும் டிரெண்ட் போல்ட் ஆகியோர் மீண்டும் டாப்-10 இல் நுழைந்துள்ளனர். இருவரும் தலா 4 இடங்கள் முன்னேற்றம் கண்டு முறையே 7-வது மற்றும் 8-வது இடத்தைப் பிடித்துள்ளனர். ஆனால், மிகப் பெரிய முன்னேற்றம் கண்டது நியூஸிலாந்தின் ஜேமிஸன்தான். 80-வது இடத்தில் இருந்த அவர் 43-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT