செய்திகள்

ஆஸி. கிரிக்கெட் வீரருக்கு கரோனா அறிகுறி

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் கேன் ரிச்சர்ட்ஸனுக்கு கரோனா வைரஸ் அறிகுறி ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

DIN

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் கேன் ரிச்சர்ட்ஸனுக்கு கரோனா வைரஸ் அறிகுறி ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

நியூஸிலாந்துடனான முதல் ஒருநாள் ஆட்டத்தின் போது தொண்டை வறட்சி காரணமாக விலகிய கேன் ரிச்சர்ட்ஸன், சிகிச்சைக்காக மருத்துவமனையில் வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்டார். 

இந்த நிலையில், தனிமைப்படுத்தப்பட்ட அறையில் கேன் ரிச்சர்ட்ஸன் அனுமதிக்கப்பட்டு, கரோனா நோய் தொற்று பாதிப்பு பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளது. இந்த பரிசோதனை முடிவுகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலிய அரசின் உத்தரவின் படி கரோனா அறிகுறிகளுடன் இருக்கும் நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனை மற்றும் தேவையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. அவ்வகையில், கேன் ரிச்சர்டஸனுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி சமீபத்தில் அவர் 14 நாள்கள் சர்வதேசப் பயணம் மேற்கொண்டு நாடு திரும்பியுள்ளார்.

எனவே பரிசோதனை முடிவுகள் வரும் வரை அவருக்கு சிகிச்சை தொடரும். அவர் விரைவில் குணமடைந்து ஆஸ்திரேலிய அணிக்கு மீண்டும் திரும்புவார் என்ற நம்பிக்கை உள்ளது என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

100 நாள்களை நிறைவு செய்த ஆக்‌ஷன் சீரியல்!

டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான ஸ்காட்லாந்து அணி அறிவிப்பு!

பாகிஸ்தானின் அபார பந்துவீச்சில் 110 ரன்களுக்கு சுருண்ட நியூசிலாந்து!

ஏமாற்றத்தைக் கொடுத்த ஜன நாயகன் வழக்கு தீர்ப்பு!

உ.பி.யில் தொடரும் அவலம்..! அம்பேத்கர் சிலை உடைப்பு!

SCROLL FOR NEXT