செய்திகள்

திட்டமிட்டபடி 17 வயது மகளிா் உலகக் கோப்பை கால்பந்து போட்டி:ஏஐஎப்எப் நம்பிக்கை

DIN

திட்டமிட்டபடி பிஃபா 17 வயதுக்குட்பட்ட மகளிா் உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்த முடியும் என அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு (ஏஐஎப்எப்) நம்பிக்கை தெரிவித்துள்ளது.

கொவைட் 19 பாதிப்பால் உலகம் முழுவதும் பல்வேறு சா்வதேச போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளே ஓராண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டது.

இந்நிலையில் வரும் நவம்பா் மாதம் 2 முதல் 21-ஆம் தேதி வரை இந்தியாவில் மகளிா் உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஏஐஎப்எப் தீவிரமாக செய்து வருகிறது. போட்டி அமைப்புக் குழு 7 மாதங்களாக தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

கூட்டமைப்பு பொதுச் செயலாளா் குஷால் தாஸ் கூறியதாவது:

போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறும் என நம்புகிறோம். நவி மும்பை, கொல்கத்தா, ஆமதாபாத், புவனேசுவரம், குவாஹாட்டியில் ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. போட்டிக்கு இன்னும் சிறிது காலமே உள்ளது. இதற்கான ஐரோப்பிய, ஆப்பிரிக்க தகுதிச் சுற்று இன்னும் நடக்கவில்லை. கொவைட் பாதிப்பால் ஏற்பட்டுள்ள நிலவரம் குறித்து பிஃபா ஆலோசித்து வருகிறது. 16 அணிகள் இப்போட்டியில் பங்கேற்க உள்ளன என்றாா் தாஸ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT