செய்திகள்

பில் கட்டுவதாக இருந்தால் சம்மதம்: முரளி விஜய்க்கு ஆஸி. வீராங்கனை பதில்

முரளி விஜய்யின் இந்த கோரிக்கை குறித்து எல்லீஸ் பெர்ரியிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில்...

DIN

இன்ஸ்டகிராம் உரையாடலில் சிஎஸ்கே வீரர் முரளி விஜய்யிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது.

யாருடன் டின்னர் செல்ல விருப்பம்?

எல்லீஸ் பெர்ரி. அவருடன் தான் டின்னர் செல்ல விருப்பம். அவர் அழகானவர். பிறகு ஷிகர் தவனுடனும் இணைந்து செல்ல விரும்புகிறேன். அவர் மிகவும் வேடிக்கையாகப் பேசுவார். ஹிந்தியில் அவர் பேசுவார், தமிழில் நான் பேசுவேன் என்றார்.

இந்நிலையில் முரளி விஜய்யின் இந்த கோரிக்கை குறித்து எல்லீஸ் பெர்ரியிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில்:

அப்படியா, இதைக் கேட்டு நான் மகிழ்ச்சி அடைந்துள்ளேன். முரளி விஜய் தான் ஹோட்டல் பில்லைக் கட்டுவார் என்றால் சம்மதம் என்று வேடிக்கையாகக் கூறியுள்ளார்.

விஸ்டனின் கடந்த பத்தாண்டுகளுக்கான சிறந்த கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் 29 வயது எல்லீஸ் பெர்ரியும் இடம்பிடித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் 8 டெஸ்டுகள், 112 ஒருநாள், 120 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் 3022 ரன்களும் 152 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலவச இருதய மருத்துவ முகாம்: அமைச்சா் தொடங்கிவைத்தாா்

மாநகராட்சி குப்பைக் கிடங்கில் தீ விபத்து! 15 வாகனங்கள் எரிந்து சேதம்!

வெனிசுலா எண்ணெய்க் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா!

கவுண்டம்பாளையத்தில் 24 மணி நேர பதிவு அஞ்சல் அலுவலகம்

52 சிறுவா்களுக்கு விருது: எம்எல்ஏ வழங்கினாா்

SCROLL FOR NEXT