செய்திகள்

பாகிஸ்தான் பேட்டிங் பயிற்சியாளராக முன்னாள் வீரர் நியமனம்

பாகிஸ்தான் பேட்டிங் பயிற்சியாளராக முன்னாள் வீரர் யூனிஸ் கான் நியமிக்கப்பட்டுள்ளார்.

DIN

பாகிஸ்தான் பேட்டிங் பயிற்சியாளராக முன்னாள் வீரர் யூனிஸ் கான் நியமிக்கப்பட்டுள்ளார்.

டிசம்பர் - ஜனவரியில் நியூசிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 2 டெஸ்டுகளில் பாகிஸ்தான் அணி விளையாடவுள்ளது. 

இந்தச் சுற்றுப்பயணத்துக்கான 35 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் கேப்டனாக இருந்த அஸார் அலிக்குப் பதிலாக ஒருநாள், டி20 அணிகளின் கேப்டனாக உள்ள பாபர் அஸாம், பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் 26 வயது பாபர் அஸாம், மூன்று வகை கிரிக்கெட் அணிகளின் கேப்டனாகவும் உள்ளார். 

இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக முன்னாள் வீரர் யூனிஸ் கான் நியமிக்கப்பட்டுள்ளார். 2022 டி20 உலகக்கோப்பை வரை இப்பணியில் நீடிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2017-ல் ஓய்வு பெற்ற 42 வயது யூனிஸ் கான், 118 டெஸ்டுகள், 265 ஒருநாள், 25 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். சமீபத்தில் இங்கிலாந்துச் சுற்றுப்பயணத்துக்கான பாகிஸ்தான் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக யூனிஸ் கான் நியமிக்கப்பட்டார். இதையடுத்து மீண்டும் அவருக்கு இந்தப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்துச் சுற்றுப்பயணத்துக்காக நவம்பர் 23 அன்று புறப்படுகிறது பாகிஸ்தான் அணி. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிளஸ் 2 கணக்குப்பதிவியல் தேர்வு: முதல்முறையாக கால்குலேட்டர் அனுமதி!

கோவை கூட்டு பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை! முதல்வர் ஸ்டாலின்

கமல் பிறந்த நாளில் மறுவெளியீடாகும் 2 திரைப்படங்கள்!

கர்நாடகத்தில் மிதமான நிலநடுக்கம்!

கனவுகளுக்காக போராடிய இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கதை | Women Cricket World Cup

SCROLL FOR NEXT