கோப்புப்படம் 
செய்திகள்

பட்டாசு வெடிக்க வேண்டாம்: ஆஸ்திரேலியாவில் இருந்தபடி கோலி வாழ்த்து

தீபாவளி பண்டிகைக்கு கிரிக்கெட் வீரர்கள் விராட் கோலி, டேவிட் வார்னர் உள்ளிட்டோர் சமூக ஊடகங்களில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

DIN


தீபாவளி பண்டிகைக்கு கிரிக்கெட் வீரர்கள் விராட் கோலி, டேவிட் வார்னர் உள்ளிட்டோர் சமூக ஊடகங்களில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் இன்று (சனிக்கிழமை) தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஆஸ்திரேலியாவுடனான ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இந்தியக் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா சென்றுள்ளது.

இந்தியக் கேப்டன் விராட் கோலி விடியோ மூலம் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க பட்டாசு வெடிக்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கேப்டனுமான டேவிட் வார்னரும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதவிர முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் விரேந்திர சேவாக், விவிஎஸ் லக்ஷ்மன் உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம்?

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு

சூப்பர் 8: இங்கிலாந்துக்கு எதிராக இலங்கை பந்துவீச்சு!

கோழிக்கோடு: சாப்பிட்ட உணவுக்கு பணம் கேட்டதால் உணவகம் மீது தாக்குதல்

SCROLL FOR NEXT