முகப்பு
செய்திகள்

கோலியை வெறுப்பது ஆஸ்திரேலிய வீரர்களுக்குப் பிடிக்கும்: பெயின்

இந்தியக் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியை வெறுப்பது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களுக்குப் பிடிக்கும் என ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெயின் கூறியுள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:52 PM
பகிர்:


இந்தியக் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியை வெறுப்பது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களுக்குப் பிடிக்கும் என ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெயின் கூறியுள்ளார்.

இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் 3 ஒருநாள் ஆட்டங்கள், 3 டி20 ஆட்டங்கள் மற்றும் 4 டெஸ்ட் ஆட்டங்களில் விளையாடவுள்ளன. இதில் இந்தியக் கேப்டன் கோலி ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் முழுமையாகப் பங்கேற்கிறார். டெஸ்ட் தொடரில் முதல் ஆட்டத்தில் விளையாடும் அவர், அடுத்த 3 ஆட்டங்களில் விளையாடவில்லை.

கோலி, அனுஷ்கா சர்மாவுக்கு ஜனவரியில் குழந்தை பிறக்கவுள்ளதால் பிசிசிஐ அவருக்கு விடுப்பு வழங்கியுள்ளது. இந்த நிலையில், கேப்டன் கோலி குறித்து ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெயின் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுபற்றி ஈஎஸ்பிஎன் கிரிக் இன்ஃபோ வெளியிட்டுள்ள செய்தியில், ஏபிசி செய்திக்கு பெயின் தெரிவித்ததாகக் கூறப்பட்டுள்ளதாவது:

"நாங்கள் விராட் கோலியை வெறுப்பதற்கு விரும்புபவர்கள். ஆனால், கிரிக்கெட் ரசிகர்களாக அவர் பேட் செய்வதைப் பார்க்க பிடிக்கும். அவர் பேட் செய்வதைப் பார்க்க பிடிக்கும், ஆனால், அவர் நிறைய ரன்கள் அடிப்பதைப் பார்க்க பிடிக்காது. 

ஆஸ்திரேலியா, இந்தியா இடையிலான ஆட்டங்கள் ஆக்ரோஷமான போட்டி. அவர் மிகவும் சவாலுக்குரிய நபர். நானும் அதேதான். அதனால், நாங்கள் இருவரும் வார்த்தைப் போரில் ஈடுபட்டுள்ளோம். அவரும் கேப்டன் நானும் கேப்டன் என்பதால் அல்ல. யாராக இருந்தாலும், இப்படி நிகழும். 

நான் அனைத்தையும் எதிர்நோக்கியுள்ளேன். இது மிகப் பெரிய தொடர்."

2018-19 சுற்றுப்பயணத்தின்போது விராட் கோலியும், டிம் பெயினும் அவ்வப்போது வார்த்தைப் போரில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. 

முழு கட்டுரையைப் படிக்க →