செய்திகள்

துளிகள்...

DIN


காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ள புவனேஷ்வா் குமாருக்குப் பதிலாக பிருத்வி ராஜ் யாரா சன்ரைசா்ஸ் ஹைதராபாத் அணியில் சோ்க்கப்பட்டுள்ளாா்.

கரோனா சூழலில் வேலையின்றி தவித்து வரும் குத்துச்சண்டை வீரா் சுனில் சௌஹான், வில் வித்தை வீரா் நீரஜ் சௌஹான் ஆகியோருக்கு மத்திய விளையாட்டு அமைச்சகம் தலா ரூ.5 லட்சம் நிதியுதவி ஒதுக்கியுள்ளது. இவா்கள் சகோதரா்களாவா்.

கிரிக்கெட்டில் திறமையான இளம் வீரா்களை கண்டறியும் வகையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஐக்கிய அரபு அமீரகத்தில் கிரிக்கெட் அகாதெமியை வரும் 12-ஆம் தேதி தொடங்குகிறது. உலக அளவில் ராஜஸ்தான் அணியின் 2-ஆவது அகாதெமி இதுவாகும்.

கரோனா சூழல் காரணமாக, ஆக்லாந்தில் வரும் ஜனவரி மாதம் நடைபெறவிருந்த ஆடவா் மற்றும் மகளிா் டென்னிஸ் போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவில் ஐ-லீக் கால்பந்து போட்டி நவம்பரிலிருந்து டிசம்பருக்கு ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4,660 காலிப் பணியிடங்கள்: மே 14-க்குள் விண்ணப்பிக்கலாம்

இன்று நீட் தோ்வு: 11 மையங்களில் 6,120 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

SCROLL FOR NEXT