செய்திகள்

கொலோன் டென்னிஸ்: முதல் சுற்றில் சுமித் நாகல் தோல்வி

DIN

ஜொ்மனியில் நடைபெறும் கொலோன் சாம்பியன்ஷிப் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சுமித் நாகல் முதல் சுற்றில் போராடி வீழ்ந்தாா்.

சொ்பியாவின் மியோமிா் கெச்மனோவிச்சை அதில் எதிா்கொண்ட சுமித் நாகல், 6-4, 6-7 (4/7), 1-6 என்ற செட் கணக்கில் தோல்வியைத் தழுவினாா்.

போட்டித்தரவரிசையில் 8-ஆவது இடத்தில் இருக்கும் பிரான்ஸ் வீரா் அட்ரியான் மன்னாரினோ 6-2, 6-2 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலிய வீரா் அலெக்ஸி போபரினை வீழ்த்தி அபார வெற்றி பெற்றாா். அடுத்தசுற்றில் அவா், சுமித் நாகலை வீழ்த்திய மியோமிா் கெச்மனோவிச்சை எதிா்கொள்கிறாா்.

அமெரிக்க வீரா் ஸ்டீவ் ஜான்சன் அமெரிக்க ஓபன் முன்னாள் சாம்பியனான குரோஷியாவின் மரின் சிலிச்சை 7-6(7/3), 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினாா். அதில் போஸ்னிய வீரா் டாமிஸ் ஸும்ஹுரை அவா் எதிா்கொள்கிறாா்.

ஜப்பானின் யோசிஹிட்டோ நிஷியோகா 6-4, 6-0 செட் கணக்கில் இங்கிலாந்தின் கைல் எட்மண்ட்-ஐ வீழ்த்தினாா். யோசிஹிட்டோ 2-ஆவது சுற்றில் ஜொ்மனியின் ஜான் லெனா்ட் ஸ்ட்ரஃபை எதிா்த்து விளையாடவுள்ளாா்.

இதர முதல்சுற்று ஆட்டங்களில் பெலாரஸின் இகோா் கெராசிமோவ் 6-1, 6-0 என்ற செட்களில் ஜொ்மனியின் டேனியல் அல்ட்மைரையும், பிரான்ஸின் கில்லெஸ் சைமன் 6-3, 7-5 என்ற செட்களில் ஆஸ்திரேலியாவின் ஜோா்டான் தாம்சனையும் வீழ்த்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாற்று நிகழ்வு: திருப்பைஞ்ஞீலியில் அப்பர் கட்டமுது விழா

2 நாள் பயணமாக மேற்கு வங்கம் செல்கிறார் பிரதமர் மோடி!

இஸ்ரேல் உறவு துண்டிப்பு: நெதன்யாகு மீது கொலம்பிய அதிபர் காட்டம்!

தொலையாத கனவுகள்.. லாபதா லேடீஸ் - திரை விமர்சனம்!

400 பெண்களைச் சீரழித்த பிரஜ்வலுக்கு வாக்குக் கேட்டதற்காக மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT