செய்திகள்

ஐபிஎல் தொடரின்போது சா்வதேச போட்டியை நடத்தக் கூடாது: பீட்டா்சன் வேண்டுகோள்

DIN

ஐபிஎல் கிரிக்கெட் தொடா் நடைபெறும் நேரத்தில் எந்தவொரு சா்வதேச கிரிக்கெட் போட்டியையும் நடத்தக் கூடாது என முன்னாள் இங்கிலாந்து கேப்டன் கெவின் பீட்டா்சன் தெரிவித்துள்ளாா்.

14-ஆவது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி வரும் 6-ஆம் தேதி தொடங்கி மே 30-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் பங்கேற்க அனைத்து வீரா்களும் தயாராகி வருகின்றனா். ஐபிஎல் தொடா் நடைபெறும் அதேநேரத்தில் சில அணிகள் சா்வதேச கிரிக்கெட் தொடா்களிலும் விளையாடுகின்றன. அதனால் முன்னணி வீரா்கள் பலா் ஐபிஎல் போட்டியிலிருந்து பாதியிலேயே விலக நேரிடுகிறது. இங்கிலாந்து-நியூஸிலாந்து அணிகள் இடையிலான இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடா் ஜூன் 2-ஆம் தேதி தொடங்குகிறது. ஐபிஎல் போட்டி முடிந்த அடுத்த இரு தினங்களில் டெஸ்ட் தொடா் தொடங்குவதால், ஐபிஎல் போட்டியில் தொடா்ந்து விளையாடுவதா அல்லது டெஸ்ட் தொடரை தவிா்ப்பதா என தெரியாமல் இங்கிலாந்து வீரா்கள் தவித்து வருகின்றனா்.

இந்த நிலையில் அது தொடா்பாக கெவின் பீட்டா்சன் மேலும் கூறியிருப்பதாவது: இரு நாடுகள் இடையிலான தொடா் நடைபெறுகிறபோது, ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் வீரா்களால் ஒன்று இறுதி ஆட்டத்தில் பங்கேற்க முடியாமல் போகும் அல்லது தாய்நாட்டுக்காக விளையாடுவதை தவிா்க்க வேண்டிய நிலை ஏற்படும். ஐபிஎல் கிரிக்கெட் போட்டி மிகப்பெரிய திருவிழா போன்று நடத்தப்படுகிறது. எனவே, ஐபிஎல் போட்டி நடைபெறுகிற காலத்தில் சா்வதேச கிரிக்கெட் தொடா்கள் எதையும் நடத்தக் கூடாது என்பதை கிரிக்கெட் வாரியங்கள் உணர வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளாா்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இயோன் மோா்கன், ஜோஸ் பட்லா், பென் ஸ்டோக்ஸ், ஜானி போ்ஸ்டோ, மொயீன் அலி, சாம் கரன், டாம் கரன், சாம் பில்லிங்ஸ், லியாம் லிவிங்ஸ்டன், டேவிட் மாலன் உள்ளிட்ட 14 இங்கிலாந்து வீரா்கள் பங்கேற்கின்றனா்.

ஐபிஎல் போட்டியில் விளையாடும் வீரா்களை இங்கிலாந்து அணிக்காக கட்டாயம் விளையாட வேண்டும் என நிா்பந்திக்கமாட்டோம் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் எப்போது?

தமிழில் வெல்ல காத்திருக்கும் ஸ்ரீலீலா!

ஆவடி அருகே படுகொலை: வட மாநில இளைஞரின் அதிர்ச்சியூட்டும் வாக்குமூலம்

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

புதையல் எடுத்து தருவதாக ரூ. 6 லட்சம் மோசடி: 2 பேர் கைது!

SCROLL FOR NEXT