முகப்பு
செய்திகள்

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியிலிருந்து வடகொரியா விலகல்!

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் பங்கேற்பதில்லை என வடகொரியா முடிவெடுத்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:57 PM
பகிர்:

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் பங்கேற்பதில்லை என வடகொரியா முடிவெடுத்துள்ளது.

விளையாட்டு உலகின் மிகப்பெரிய போட்டியாக கருதப்படுவது ஒலிம்பிக்ஸ் போட்டி. 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இப்போட்டி 2016-ல் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்றது. அதன்பின் 2020 டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டி ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 9-ஆம் தேதி வரை நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கரோனா பாதிப்பால், போட்டிகளை ஒத்திவைக்க வேண்டும் என விளையாட்டு வீரா்கள் உள்பட பல்வேறு தரப்பினா் வலியுறுத்தினா். இதையடுத்து டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டி ஒத்திவைக்கப்பட்டது. கரோனா வைரஸ் பரவலால் ஓராண்டுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒலிம்பிக்ஸ் போட்டி ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 8-ம் தேதி வரையும் பாராலிம்பிக்ஸ் போட்டிகள் ஆக. 24 முதல் செப். 5 வரையும் நடைபெறவுள்ளன. 

இந்நிலையில் கரோனா அச்சுறுத்தல் காரணமாக தனது வீரர்களை டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டிக்கு அனுப்புவதில்லை என்கிற முடிவை வடகொரியா எடுத்துள்ளது. மார்ச் 25 அன்று நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக விளையாட்டு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. வடகொரியாவில் கரோனாவின் பாதிப்பு இல்லாததால் தங்களது விளையாட்டு வீரர்களின் நலனை முன்னிட்டு டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →