தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என வென்றது பாகிஸ்தான் அணி.
செஞ்சுரியனில் நடைபெற்ற 3-வது ஒருநாள் ஆட்டத்தில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி, 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 320 ரன்கள் எடுத்தது. ஃபகார் ஸமான் மீண்டும் சதமடித்து அசத்தினார். அவர் 101 ரன்களில் ஆட்டமிழந்தார். கேப்டன் பாபர் அஸாம் 94 ரன்கள் எடுத்தார். இமாம் உல் ஹக் 57 ரன்கள் எடுத்தார்.
இதன்பிறகு விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி, 49.3 ஓவர்களில் 292 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஜேனிமன் மலான் அதிகபட்சமாக 70 ரன்கள் எடுத்தார். ஷகீன் ஷா அப்ரிடியும் முகமது நவாஸும் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தார்கள்.
3-வது ஒருநாள் ஆட்டத்தை 28 ரன்களில் வென்ற பாகிஸ்தான் ஒருநாள் தொடரை 2-1 எனக் கைப்பற்றியது. பாபர் அஸாம் ஆட்ட நாயகனாகவும் ஃபகார் ஸமான் தொடர் நாயகனாகவும் தேர்வானார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.