செய்திகள்

முதல் டி20: பாக். வெற்றி

DIN

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் பாகிஸ்தான் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. 4 ஆட்டங்கள் கொண்ட தொடரில் அந்த அணி முன்னிலை பெற்றது.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா 20 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் அடித்தது. அடுத்து ஆடிய பாகிஸ்தான் 19.5 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் அடித்து வென்றது.

தென் ஆப்பிரிக்க அணியில் அதிகபட்சமாக எய்டன் மாா்க்ரம் 8 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 51 ரன்கள் விளாசினாா். பௌலிங்கில் அந்த அணியின் பியுரன் ஹென்ரிக்ஸ் 3 விக்கெட்டுகள் சாய்த்தாா். பாகிஸ்தான் அணி பேட்டிங்கில் முகமது ரிஸ்வான் 9 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 74 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தாா். பௌலிங்கில் முகமது நவாஸ் 2 விக்கெட் வீழ்த்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

12 ராசிக்குமான தினப்பலன்!

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

SCROLL FOR NEXT