கோப்புப்படம் 
செய்திகள்

வங்கதேசம்-இங்கிலாந்து ஒருநாள், டி20 தொடர்கள் ஒத்திவைப்பு

வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் மார்ச் 2023 வரை ஒத்திவைத்துள்ளது.

DIN


வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் மார்ச் 2023 வரை ஒத்திவைத்துள்ளது.

வங்கதேசம், இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான தலா 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்கள் செப்டம்பர், அக்டோபர் மாதங்கள் நடைபெறவிருந்தன. இந்த நிலையில் இந்தத் தொடர்களை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் செவ்வாய்க்கிழமை ஒத்திவைத்தது. இந்தத் தொடர்களை ஒத்திவைக்க இருநாட்டு கிரிக்கெட் வாரியங்களும் இணைந்தே முடிவெடுத்ததாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

எனினும், ஒத்திவைப்புக்கான காரணங்கள் எதுவும் குறிப்பிடவில்லை.

கரோனா பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் 2021 2-ம் பகுதி செப்டம்பர் 19-ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. இறுதி ஆட்டம் அக்டோபர் 15-ம் தேதி நடைபெறுகிறது.

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காகவே வங்கதேச தொடர் ஒத்திவைக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருங்குயில்... திவ்யா துரைசாமி!

மகளிர் உலகக் கோப்பை தோல்வி எதிரொலி! பாகிஸ்தான் அணி தலைமைப் பயிற்சியாளர் நீக்கம்!

பிலிப்பின்ஸில் ‘கேல்மெகி புயல்’ கோரத்தாண்டவம்: 26 பேர் உயிரிழப்பு!

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

SCROLL FOR NEXT