செய்திகள்

அதிக விக்கெட்டுகள்: கும்ப்ளே சாதனையை சமன் செய்தார் ஆண்டர்சன்!

​விராட் கோலி விக்கெட்டை வீழ்த்தியதன்மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் வரிசையில் அனில் கும்ப்ளே சாதனையை ஜேம்ஸ் ஆண்டர்சன் சமன் செய்துள்ளார்.

DIN


விராட் கோலி விக்கெட்டை வீழ்த்தியதன்மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் வரிசையில் அனில் கும்ப்ளே சாதனையை ஜேம்ஸ் ஆண்டர்சன் சமன் செய்துள்ளார்.

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம் டிரென்ட் பிரிட்ஜில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து 183 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து, முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்தியா உணவு இடைவேளையில் 1 விக்கெட் இழப்புக்கு 97 ரன்கள் எடுத்து நல்ல நிலையில் இருந்தது.

உணவு இடைவேளைக்குப் பிறகு, ஆண்டர்சன் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினார். 4 ரன்கள் எடுத்திருந்த சேத்தேஷ்வர் புஜாராவை முதலில் வீழ்த்தினார் ஆண்டர்சன்.

தொடர்ந்து களமிறங்கிய இந்திய கேப்டன் விராட் கோலி முதல் பந்திலேயே ஆண்டர்சனிடம் ஆட்டமிழந்தார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் இது ஆண்டர்சனின் 619-வது விக்கெட். இதன்மூலம், அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் வரிசையில் இந்தியாவின் ஜாம்பவான் அனில் கும்ப்ளே சாதனையை அவர் சமன் செய்துள்ளார்.

அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் வரிசையில் முதலிரண்டு இடங்களில் முறையே முத்தையா முரளிதரன் (800) மற்றும் ஷேன் வார்னே (708) உள்ளனர்.

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 600-க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே வேகப்பந்துவீச்சாளர் ஆண்டர்சன் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”5 தொகுதிகளைக் கேட்டுள்ளோம்!” காதர் மொகிதீன் தகவல்! | DMK

துரந்தர் - டாக்ஸிக்... தாவீது - கோலியாத்... ராம் கோபால் வர்மாவின் 10 உண்மைகள்!

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

SCROLL FOR NEXT