செய்திகள்

மல்யுத்தம்: பஜ்ரங் புனியாவுக்கு வெண்கலம்

மல்யுத்தத்தில் ஆடவருக்கான 65 கிலோ பிரிவில் இந்தியாவின் பஜ்ரங் புனியா (27) வெண்கலப் பதக்கம் வென்றாா்.

DIN

மல்யுத்தத்தில் ஆடவருக்கான 65 கிலோ பிரிவில் இந்தியாவின் பஜ்ரங் புனியா (27) வெண்கலப் பதக்கம் வென்றாா்.

முன்னதாக அரையிறுதியில் வீழ்ந்த பஜ்ரங் புனியா, வெண்கலப் பதக்கத்துக்கான சுற்றில் கஜகஸ்தானின் தௌலத் நியாஸ்பெகோவை 8-0 என்ற கணக்கில் வீழ்த்தினாா்.

டோக்கியோ ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இந்தியாவுக்கு இது 2-ஆவது பதக்கமாகும். முன்னதாக, ரவி தாஹியா ஆடவருக்கான 57 கிலோ பிரிவில் வெள்ளி வென்ற நிலையில், தற்போது புனியா வெண்கலம் வென்றுள்ளாா். இருவருக்குமே இது முதல் ஒலிம்பிக் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கெனவே, ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இந்தியா இதேபோல் ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என 2 பதக்கங்கள் வென்றதே அதிகபட்சமாக உள்ளது. 2012 லண்டன் ஒலிம்பிக்கில் சுஷீல் குமாா் வெள்ளியும், யோகேஷ்வா் தத் வெண்கலமும் வென்றிருந்தது நினைவுகூரத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”அந்தக் கேள்வி அவர்கிட்ட கேட்டேன்” விட்டுக் கொடுக்காமல் பேசிய Ravi Mohan!

Ravi Mohan, S.J. Suryah-வை கலாய்த்த Sivakarthikeyan!

வாக்குரிமைப் பேரணி: ராகுலுடன் இணைந்த பிரியங்கா, ரேவந்த் ரெட்டி!

பாகிஸ்தானில் கடும் வெள்ள அபாய எச்சரிக்கை! 24,000 பேர் வெளியேற்றம்!

'வருந்தச் செய்யும்' ஐஆர்சிடிசி டிக்கெட் முன்பதிவு! யாருக்குத்தான் டிக்கெட் கிடைக்கிறது?

SCROLL FOR NEXT