செய்திகள்

2-வது டெஸ்ட்: இந்தியா முதல் இன்னிங்ஸில் 364 ரன்கள் குவிப்பு

DIN

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 364 ரன்கள் குவித்துள்ளது. 

இந்தியா - இங்கிலாந்துக்கு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் டிரா ஆன நிலையில், லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் 2-வது டெஸ்ட் நேற்று தொடங்கியது. முதல் நாள் முடிவில் 90 ஓவா்களில் 3 விக்கெட் இழப்புக்கு 276 ரன்களை எட்டியது. ரோஹித் - ராகுல் கூட்டணி முதல் விக்கெட்டுக்கு 126 ரன்கள் சோக்க, ராகுல் சதம் கடந்து ஆட்டமிழக்காமல் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 

ரோஹித் சா்மா 83 ரன்கள் சோத்தாா். இன்று ஆட்டம் தொடங்கிய முதல் ஓவரிலேயே ரன் எதுவும் சேர்க்காமல் 129 ரன்களில் ஆலி ராபின்சன் பந்தில் ஆட்டமிழந்தார் ராகுல். இதன்பிறகு இந்த டெஸ்டிலாவது நன்கு விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட ரஹானே, 1 ரன்னில் ஆண்டர்சன் பந்தில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். ரிஷப் பந்தும் ஜடேஜாவும் நல்ல கூட்டணியை அமைத்தார்கள்.

5 பவுண்டரிகள் அடித்த ரிஷப் பந்த், 37 ரன்களில் வுட் பந்தில் ஆட்டமிழந்தார். 

ஷமி ரன் எதுவும் சேர்க்காமல் அலி பந்தில் வீழ்ந்தார். 2-ம் நாள் மதிய உணவு இடைவேளையின்போது இந்திய அணி 116 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 346 ரன்கள் எடுத்திருந்தது. ஜடேஜா 31 ரன்கள், இஷாந்த் சர்மா ரன் எதுவும் எடுக்காமல் களத்தில் இருந்தனர். உணவு இடைவேளைக்குப் பின் களமிறங்கிய இந்திய அணி மேலும் 18 ரன்கள் சேர்த்த நிலையில் எஞ்சியிருந்த 3 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. 

இதனால் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 364 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து தரப்பில் ஆண்டர்சன் 5, ராபின்சன், மார்க் வுட் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதைத்தொடர்ந்து இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸை விளையாடி வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சித்திரைத் திருவிழா நிறைவு: அழகர் மலைக்கு சென்றடைந்த கள்ளழகர்!

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: சென்னை விடுதிகளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை

கலால் முறைகேடு வழக்கு: உச்சநீதிமன்றத்தில் கேஜரிவால் பதில்மனு தாக்கல்!

அடுத்த 5 நாள்களுக்கு வெயில் அதிகரிக்கும்: எச்சரிக்கும் வானிலை மையம்!

திருவள்ளூர் அருகே கோயில் காவலாளி அடித்துக் கொலை: போலீசார் தீவிர விசாரணை

SCROLL FOR NEXT