ஈட்டி எறிதல் - உலகத் தரவரிசை பட்டியலில் நீரஜ் சோப்ராவிற்கு 2 வது இடம்
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பாக கலந்து கொண்ட பல வீரர்கள் தகுதிச்சுற்றைக் கூட தாண்டாமல் வெளியேறினர்
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பாக கலந்து கொண்ட பல வீரர்கள் தகுதிச்சுற்றைக் கூட தாண்டாமல் வெளியேறினர் . ஒரு சிலர் மட்டுமே இறுதிச் சுற்றுவரை முன்னேறி போராடி வெண்கலப்பதக்கங்கள் மற்றும் ஒரே ஒரு வெள்ளிப்பதக்கத்தைப் பெற்றனர்
பின் இறுதியாக தடகளப் போட்டிகளில் ஒன்றான 'ஈட்டி எறிதலில்' இந்திய வீரர் நீரஜ் சோப்ரா முதல் வாய்ப்பிலேயே இறுதிச்சுற்றுக்கு முன்னேறி அசத்தியதுடன் இறுதிப்போட்டியில் 87.58 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து முதலிடத்தை தக்கவைத்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.
இதையும் படிக்க | அடுத்த இலக்கு உலக சாம்பியன்ஷிப்: நீரஜ் சோப்ரா
நாட்டிற்கு முதல் தங்கம் என்பதால் நீரஜை அனைத்து தரப்பினரும் கொண்டாடித் தீர்த்தனர்.
இந்நிலையில் ஒலிம்பிக்கில் தங்கம் வென்றதன் மூலம் உலக தரவரிசைப் பட்டியலில் 16 வது இடத்திலிருந்து 1,315 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்திற்கு முன்னேறி உள்ளார்.
1,396 புள்ளிகளுடன் ஜெர்மனியைச் சார்ந்த ஜோஹன்னாஸ் வெட்டர் 1,396 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.