செய்திகள்

டி20 உலகக் கோப்பை: நியூசிலாந்து அணியின் பயிற்சியாளர் குழுவில் இணைந்த முன்னாள் வீரர்

நியூசிலாந்து அணிக்காக 18 டெஸ்டுகள், 82 ஒருநாள், 20 டி20 ஆட்டங்களில் ஷேன் பாண்ட் விளையாடியுள்ளார். 

DIN

நியூசிலாந்து அணியின் பயிற்சியாளர்கள் குழுவில் முன்னாள் வீரர் ஷேன் பாண்ட் இணைந்துள்ளார்.

டி20 உலகக் கோப்பை - ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை நடைபெறுகிறது. துபை, அபு தாபி, ஷார்ஜா, ஓமன் என நான்கு பகுதிகளில் டி20 உலகக் கோப்பை நடைபெறவுள்ளது. இந்தியாவில் நடத்தப்படவிருந்த டி20 உலகக் கோப்பை போட்டி, கரோனா சூழல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

டி20 உலகக் கோப்பையில் விளையாடவுள்ள நியூசிலாந்து அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. கேன் வில்லியம்சன் தலைமையிலான அணியில் மூத்த வீரர் ராஸ் டெய்லர் நீக்கப்பட்டுள்ளார். காலின் டி கிராண்ட்ஹோம், ஃபின் ஆலன் ஆகியோருக்கும் அணியில் இடமளிக்கப்படவில்லை. இதே அணி இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரிலும் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் நியூசிலாந்து அணியின் பயிற்சியாளர் குழுவில் முன்னாள் வீரர் ஷேன் பாண்ட் இணைந்துள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளரான ஷேன் பாண்ட், ஐபிஎல் போட்டிக்காக ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் சென்று பணியாற்றவுள்ளார். அதனால் அவருடைய அனுபவம் டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கு உதவியாக இருக்கும் என்று நியூசிலாந்து அணியின் பயிற்சியாளர் குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரிலும் நியூசிலாந்து அணியுடன் இணைந்து ஷேன் பாண்ட் பணியாற்றுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நியூசிலாந்து அணிக்காக 18 டெஸ்டுகள், 82 ஒருநாள், 20 டி20 ஆட்டங்களில் ஷேன் பாண்ட் விளையாடியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொழிற்பயிற்சி மையத்தில் அக்கவுண்ட் ஆபீசர் பணி

நடிகர் மதன் பாப் உடல் தகனம்

“Button Phone போதும்!” எனக்கு போனில் பேசப் பிடிக்காது! கேப்டன் எம்.எஸ்.தோனி

தமிழகத்தில் 5 நாள்களுக்கு கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்?

ருதுராஜ் வருகிறார், மினி ஏலத்தில் ஓட்டைகளை அடைப்போம்: எம்.எஸ்.தோனி

SCROLL FOR NEXT