இந்தியாவுக்கு எதிராக அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் இணைந்த ஜோ ரூட்
ஸ்டீவ் ஸ்மித், கேரி சோபர்ஸ், ரிச்சர்ட்ஸ், ரிக்கி பாண்டிங்...
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தொடர்ச்சியாக மூன்றாவது சதத்தை அடித்துள்ளார் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்.
இந்தியாவுக்கு எதிராக ஸ்டீவ் ஸ்மித், கேரி சோபர்ஸ், ரிச்சர்ட்ஸ், ரிக்கி பாண்டிங் ஆகிய வீரர்கள் அதிகபட்சமாகத் தலா எட்டு டெஸ்ட் சதங்கள் அடித்துள்ளார்கள். 3-வது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் இந்தியாவுக்கு எதிராக மீண்டும் சதமடித்த ஜோ ரூட், இந்தப் பட்டியலில் இணைந்துள்ளார்.
30 வயது ஜோ ரூட், இந்தத் தொடரில் மிகச்சிறப்பாக விளையாடி வருகிறார். முதல் டெஸ்டில் 64, 109 ரன்கள் எடுத்தவர், லார்ட்ஸ் டெஸ்டில் 180*, 33 ரன்கள் எடுத்தார். இப்போது மற்றொரு சதம். 23 டெஸ்ட் சதங்கள் அடித்துள்ள ஜோ ரூட், 8 சதங்களை இந்தியாவுக்கு எதிராக எடுத்துள்ளார். 2021-ல் மட்டும் ஆறு சதங்களை எடுத்துள்ளார். இதனால் இந்தியாவுக்கு எதிராக அதிக டெஸ்ட் சதங்களை அடித்தவர்களின் பட்டியலில் அவரும் இணைந்துள்ளார்.
இந்தியாவுக்கு எதிராக அதிக டெஸ்ட் சதங்கள் - 8
ஸ்மித் (28 இன்னிங்ஸ்)
சோபர்ஸ் (30 இன்னிங்ஸ்)
ரிச்சர்ட்ஸ் (41 இன்னிங்ஸ்)
ரூட் (41 இன்னிங்ஸ்)
பாண்டிங் (51 இன்னிங்ஸ்)