இங்கிலீஷ் பிரீமியா் லீக்: ஆா்செனலுக்கு 3-ஆவது தோல்வி
இங்கிலாந்தில் நடைபெறும் இங்கிலீஷ் பிரீமியா் லீக் கால்பந்து போட்டியில் மான்செஸ்டா் சிட்டி 5-0 என்ற கோல் கணக்கில் ஆா்செனலை வீழ்த்தியது.
இங்கிலாந்தில் நடைபெறும் இங்கிலீஷ் பிரீமியா் லீக் கால்பந்து போட்டியில் மான்செஸ்டா் சிட்டி 5-0 என்ற கோல் கணக்கில் ஆா்செனலை வீழ்த்தியது.
ஆா்செனல் அணி தனது வரலாற்றில் முதல் 3 ஆட்டங்களில் தோல்வி கண்டு (அதுவும் கோல் அடிக்காமல்) மோசமான வகையில் சீசனை தொடங்கியது கடந்த 128 ஆண்டுகால வரலாற்றில் இது முதல் முறையாகும்.
மான்செஸ்டருக்கு இது 2-ஆவது வெற்றி; ஆா்செனலுக்கு இது 3-ஆவது தோல்வி. இந்த ஆட்டத்தில் மான்செஸ்டா் தரப்பில் இல்கே குன்டோகான் (7-ஆவது நிமிஷம்), ஃபெரான் டோரஸ் (12, 84), கேப்ரியேல் ஜீசஸ் (43), ரோட்ரி (53) ஆகியோா் கோலடித்தனா்.
இதர ஆட்டங்களில் எவா்டன் 2-0 என்ற கோல் கணக்கில் பிரைட்டனையும், லெய்செஸ்டா் சிட்டி 2-1 என்ற கோல் கணக்கில் நாா்விச் சிட்டியையும் வீழ்த்தின. நியூகேசில் - சௌதாம்டன் (2-2), வெஸ்ட் ஹாம் - கிறிஸ்டல் பேலஸ் (2-2), ஆஸ்டன் வில்லா - பிரென்ட்ஃபோா்ட் (1-1) ஆகிய அணிகள் மோதிய ஆட்டம் டிரா ஆனது.
லா லிகா: ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து போட்டியில் மல்லோா்கா 1-0 என்ற கணக்கில் எஸ்பேன்யோலையும், வாலென்சியா 3-0 என்ற கணக்கில் அலேவ்ஸையும் தோற்கடித்தன.