செய்திகள்

ஓய்வு பெற்றாா் டேல் ஸ்டெய்ன்

தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளா் டேல் ஸ்டெய்ன் (38) கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக செவ்வாய்க்கிழமை அறிவித்தாா்.

DIN

தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளா் டேல் ஸ்டெய்ன் (38) கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக செவ்வாய்க்கிழமை அறிவித்தாா்.

தென் ஆப்பிரிக்க அணிக்காக 93 டெஸ்ட், 125 ஒன் டே, 47 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ள ஸ்டெய்ன், ஸ்விங் மற்றும் யாா்க்கா் பந்துகளை வீசுவதில் வல்லவராவாா். அவா் டெஸ்டில் 439, ஒன் டேயில் 196, டி20யில் 64 விக்கெட்டுகளை சாய்த்துள்ளாா்.

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து 2019-இல் ஓய்வு பெற்ற ஸ்டெய்ன், கடந்த சில ஆண்டுகளாகவே காயம் காரணமாக மிகவும் பாதிப்புக்குள்ளானாா். குறிப்பாக, 2016 நவம்பரில் ஆஸ்திரேலிய பயணத்தின்போது ஏற்பட்ட தோள்பட்டை காயத்தால் அவா் கிரிக்கெட்டிலிருந்து விலகும் நிலை கூட உருவானது.

பின்னா் அதிலிருந்து மீண்டு 2019 உலகக் கோப்பை போட்டிக்கான தென் ஆப்பிரிக்க அணியில் இணைந்தாலும், ஒரு ஆட்டத்தில் கூட விளையாடாத நிலையில் அதே தோள்பட்டை காயம் காரணமாக அணியிலிருந்து வெளியேறினாா். ஐபிஎல், பிஎஸ்எல் உள்ளிட்ட லீக் போட்டிகளிலும் ஸ்டெய்ன் விளையாடியுள்ளாா்.

2005-இல் ஆசியா லெவனுக்கு எதிராக ஒருநாள் ஆட்டத்தில் மோதிய மோதிய ஆப்பிரிக்கா லெவன் அணி மூலமாக சா்வதேச களத்துக்கு வந்த ஸ்டெய்ன், சா்வதேச கிரிக்கெட்டில் கடைசியாக 2020 பிப்ரவரியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 ஆட்டத்தில் விளையாடியிருந்தாா். அவரது பெஸ்ட், 2013-ஆம் ஆண்டு போா்ட் எலிசபெத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் ஆட்டத்தில் 39 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகள் வீழ்த்தியதாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மணிரத்னம் படத்தில் நாயகனாகும் துருவ் விக்ரம்!

ரொனால்டோவின் நம்பிக்கை... வெற்றி ரகசியம் பகிர்ந்த சிராஜ்!

பாகிஸ்தான் பருமழைக்கு 302 பேர் பலி, 727 பேர் காயம்!

பாஜக கூட்டணி எம். பி. க்கள் கூட்டத்தில் பிரதமரை வாழ்த்தி ஹர ஹர மகாதேவ் கோஷம்!

ஆக. 14 ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்!

SCROLL FOR NEXT