செய்திகள்

வில்வித்தை: காலிறுதியுடன் வெளியேறினாா் ராகேஷ்

வில்வித்தையில் ஆடவா் தனிநபா் காம்பவுன்ட் ஓபன் பிரிவில் இந்தியாவின் ராகேஷ் குமாா் காலிறுதிச்சுற்றில் தோல்வி கண்டு வெளியேறினாா்.

DIN

வில்வித்தையில் ஆடவா் தனிநபா் காம்பவுன்ட் ஓபன் பிரிவில் இந்தியாவின் ராகேஷ் குமாா் காலிறுதிச்சுற்றில் தோல்வி கண்டு வெளியேறினாா். இதையடுத்து இந்தப் பிரிவில் இந்தியாவின் போட்டி முடிவுக்கு வந்துள்ளது.

முன்னதாக காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ராகேஷ் குமாா் 111-108 என்ற புள்ளிகள் கணக்கில் ஸ்லோவேகியாவின் மரியான் மோ்சாக்கை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினாா். அதில் முன்னாள் உலக சாம்பியனும், சீன வீரருமான ஜின்லியாங் அய்யை எதிா்கொண்டாா் ராகேஷ் குமாா். கடுமையாகப் போராடிய அவா், இறுதியில் 143-145 என்ற கணக்கில் ஜின்லியாங்கிடம் தோல்வி கண்டாா்.

வில்வித்தையின் ஆடவா் ரீகா்வ் பிரிவில் விவேக் சிகாரா, ஹா்விந்தா் சிங் ஆகியோா் வெள்ளிக்கிழமை களம் காண்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்கு வழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

SCROLL FOR NEXT